உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தலைக்குனிவு ; அமெரிக்காவில் அந்த தொழில் நடத்திய இந்திய வம்சாவளியினர்; 21 பேரை சுற்றி வளைத்தது போலீஸ்

தலைக்குனிவு ; அமெரிக்காவில் அந்த தொழில் நடத்திய இந்திய வம்சாவளியினர்; 21 பேரை சுற்றி வளைத்தது போலீஸ்

டெக்ஸாஸ்: அமெரிக்காவில் விபச்சாரத் தொழில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏழு பேர் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் டெக்சாஸ் மாகாணத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இந்த சம்பவம் வெளியே தெரியவந்தது.மத்திய அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் டென்டான் நகரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் பல இடங்களில் ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தினர். இதில் இளம்பெண்கள், மைனர் பெண்கள் ஆகியோரை பாலியில் தொழில் ஈடுபடுத்தும் வகையில் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் செக்ஸ் உணர்வு தூண்டும் பொருட்களும் விற்பனை செய்துள்ளனர். இதில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 7 பேர் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். நிகில்பாந்தி, நிகில்குமாரி, காலாமோனீஷ், கார்த்திக்ராயபதி, நபின்செரேஷ்தா, அமித்குமார், ஜெய்கிரண்ரெட்டி மேக்கலா ஆகியோர் தற்போது போலீஸ் கஸ்டடியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ