உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச் சூடு: போலீஸ் அதிகாரி, சந்தேக நபர் உயிரிழப்பு

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச் சூடு: போலீஸ் அதிகாரி, சந்தேக நபர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் உயிரிழந்து விட்டார்.அமெரிக்காவின், அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் நுழைவாயிலுக்கு வெளியே திடீரென மர்ம நபர் ஒருவர் பயங்கர துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் அந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள அறைகளின் ஜன்னல்கள் பலத்த சேதம் அடைந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரும் உயிரிழந்து விட்டார். எமோரி பல்கலைக்கழகம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.'எமோரி பல்கலைக் கழகத்திலிருந்து வெளிவந்த செய்திகளால் நாங்கள் அச்சமடைந்தோம். மேலும் முழு வளாகத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்கிறோம்' என்று ஜார்ஜியா அட்டர்னி ஜெனரல் கிறிஸ் கார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஆக 09, 2025 12:55

மற்றநாடுகள் போரை நிறுத்தினால் மட்டும் போதாது. உன்னால் உன்னுடைய நாட்டில் தினம் தினம் நடக்கும் உள்நாட்டு துப்பாக்கி சூட்டை நிறுத்தமுடியவில்லை. ஆகையால் உனக்கு நோபல் அமைதி பரிசு கிடையாது போ என்று நோபல் பரிசுக்குழுவினர் டிரம்ப்பிடம் கண்டிப்பாக கூறவேண்டும்.


HoneyBee
ஆக 09, 2025 12:37

தீவிரவாதிகளை வளர்த்தால் இப்படி தான் இருக்கும்


Natarajan Ramanathan
ஆக 09, 2025 09:09

உலகம் முழுதும் மர்ம நபர்களை வேட்டையாடுவது சட்டபூர்வமாக்கப்படவேண்டும்... உலகமே அமைதிபெறும்.


பேசும் தமிழன்
ஆக 09, 2025 08:48

துப்பாக்கி சூடு நடத்தியது மர்ம நபரா..... மர்ம நபர்களை நாட்டின் உள்ளே அனுமதிக்கும் எந்த நாடும் பின்னாளில் கடும் சவால்களை சந்திக்க நேரிடும்.... ஏனெனில் அந்தளவுக்கு நல்லவர்கள் அவர்கள்.... இருக்கும் நாட்டுக்கு கண்டிப்பாக விசுவாசமாக இருக்க மாட்டார்கள்.


HoneyBee
ஆக 09, 2025 12:37

தீவிரவாதிகளை சப்போர்ட் செய்தால் இதுதான் சாகட்டும் அந்த அமெரிக்கா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை