உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தென் கொரியாவில் விடாது எரியும் காட்டுத்தீ: 18 பேர் பலி

தென் கொரியாவில் விடாது எரியும் காட்டுத்தீ: 18 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சியோல்; தென் கொரியாவில் 5 நாட்களை கடந்து கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயினால் 18 பேர் பலியாகி உள்ளனர். தென் கொரியாவின் சான்சியாங்க் பிராந்தியத்தில் நிலவும் மோசமான வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ பற்றியது. 5 நாட்களை கடந்தும் தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. உய்சங் பகுதியில் 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த புத்தர் கோவில் தீயில் சிக்கி முழுமையாக சேதம் அடைந்தது. பலத்த காற்று மற்றும் உஷ்ணமான நிலை காரணமாக, தீ கட்டுக்கடங்காமல் எரிகிறது. காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 18 பேர் பலியாகி இருக்கின்றனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.காட்டுத்தீயை கட்டுப்படுத்த அதிகாரிகள் முயற்சித்த வரும் அதே வேளையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அண்டாங் உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.தீயைக் கட்டுப்படுத்த 10,000க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் களத்தில் இறங்கி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை