உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இதெல்லாம் மீண்டும் செய்ய மாட்டேன்: மன்னிப்பு கோரினார் தென் கொரியா அதிபர்!

இதெல்லாம் மீண்டும் செய்ய மாட்டேன்: மன்னிப்பு கோரினார் தென் கொரியா அதிபர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சியோல்: 'தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை மீண்டும் அமல்படுத்த மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்' என தென் கொரியா அதிபர் யூன் சுக் இயோல் கூறியுள்ளார்.கிழக்காசிய நாடான தென் கொரியாவில், அடுத்தாண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை மசோதா குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் தொடர் மோதல் போக்கு நிலவியது. இதை அடுத்து 'தேச விரோத சக்திகளை ஒழிக்க, அவசரநிலை ராணுவ சட்டம் பிரகடனப்படுத்தப்படுகிறது என அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். தென்கொரியா பார்லிமென்டில் நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் ராணுவ ஆட்சி பிரகடனத்திற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். ராணுவ ஆட்சியை திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து, ராணுவ ஆட்சியை அமல் செய்யும் பிரகடனத்தை திரும்ப பெறுவதாக, அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார். இதனால் அந்த நாட்டில் 12 மணி நேரம் நிலவிய பெரும் குழப்பம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே நாட்டு மக்களிடையே பேசியதாவது:மக்களை கவலை அடைய செய்துள்ளேன். பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். ராணுவ ஆட்சி அமல்படுத்தியதிற்கு என்னை மன்னித்து விடுங்கள். ராணுவ ஆட்சியை மீண்டும் அமல்படுத்த மாட்டேன். எனது அரசியல் எதிர்காலத்தை கட்சி தீர்மானிக்கும். எனது செயலுக்காக, எந்தவொரு விளைவுகளையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
டிச 07, 2024 14:33

இந்திரா கூட எமெர்ஜென்சி கொண்டு வந்ததற்கு மன்னிப்புக் கேட்டு, பழியை அதிகாரிகள் மீது போட்டார். பிறகு நிலையான ஆட்சி தருகிறேன் என ஓட்டு வாங்கி கட்சியையே குடும்ப கார்ப்பரேட் ஆக்கினார். புரியலன்னா சோனியா கிட்ட ட்யூஷன் படிங்க.


S Regurathi Pandian
டிச 07, 2024 11:35

மக்கள் போராட்டமே ஜனநாயகத்தின் பாதுகாப்பு. மக்கள் போராட்டத்தை எதிர்ப்போர், ஒடுக்க நினைப்போர், இழிவுபடுத்துவோர், கண்டுகொள்ளாமல் இருப்போர் எல்லாம் சர்வாதிகாரிகள்


SUBBU,MADURAI
டிச 07, 2024 10:46

A ranking of democracies predicted by economists in The Guardian (British) News a few months ago! 22 - South Korea with full democracy. 41 - India with Flawed democracy.


RAMAKRISHNAN NATESAN
டிச 07, 2024 10:45

டுமீலு நாட்டு ஹிம்சை அரசர் கூட இப்படித்தான் காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு .......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை