உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சாலை விபத்தில் சுக்கு நூறான கார்: இலங்கை அமைச்சர் பரிதாப பலி

சாலை விபத்தில் சுக்கு நூறான கார்: இலங்கை அமைச்சர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: இலங்கை நாட்டில் நடைபெற்ற கார் விபத்தில் அந்நாட்டின் இணை அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுநாயக்க நெடுஞ்சாலை வழியாக கொழும்பு நோக்கி சனத் நிஷாந்த மற்றும் அவரது உதவியாளர்கள் சென்று கொண்டிருந்தபோது இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னோக்கி சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியதோடு மட்டுமல்லாமல் சாலையின் மீதிருந்த தடுப்புச் சுவரிலும் மோதியது. இதில் சுக்குநூறான காருக்குள் அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்டோர் சிக்கிக் கொண்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3a8rsdfz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட 3 பேரை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தார். மேலும் அமைச்சருடன் விபத்தில் சிக்கிய அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஜெயக்கொடியும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

N Annamalai
ஜன 25, 2024 22:20

ஆழ்ந்த இரங்கல்கள் . இரவு பயணம் செய்யும் மூணு நூறு முறை யோசிக்க வேண்டும் .ஒரு நொடி தூக்கம் விபத்து நடக்க காரணம் ஆகி விடும் .இரவு பேருந்து ஓட்டுனர்கள் ,லாரி ஓட்டுனர்கள் அவர்களின் தொழில் அது அவர்களை பார்த்து மக்கள் பயணிக்கக் கூடாது .


Senthoora
ஜன 25, 2024 20:05

ஆழ்ந்த அனுதாபங்கள்,


vijay
ஜன 25, 2024 13:13

RIP


duruvasar
ஜன 25, 2024 11:42

பரிதாபம். ஆன்மா சாந்தியடையட்டும்.


Ganesh Pillai
ஜன 25, 2024 11:14

Deep condolences ???? ...


தத்வமசி
ஜன 25, 2024 10:55

ஆழ்ந்த அனுதாபங்கள்.


A Viswanathan
ஜன 25, 2024 13:07

அன்னாரது ஆத்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ