உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ராணுவத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்

ராணுவத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்

டாக்கா : வங்கதேச ராணுவம், அரசியலில் தலையிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மாணவர்கள் தலைமையிலான புதிய அரசியல் கட்சி போராட்டத்தில் இறங்கியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்ததால், அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதை தொடர்ந்து, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் ஒன்றிணைந்து, தேசிய குடிமக்கள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை கடந்த மாதம் துவக்கினர். இந்நிலையில், வங்கதேச அரசியலில் அந்நாட்டு ராணுவம் குறுக்கிடுவதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.தேசிய குடிமக்கள் கட்சியின் தலைவர் ஹஸ்னத் அப்துல்லா, தன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன் விபரம்: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை, இந்தியாவின் ஆதரவுடன் மறுசீரமைக்கப்பட்ட புதிய கட்சியாக களம் இறங்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இது தொடர்பாக கடந்த 11ம் தேதி எங்களை அழைத்து ராணுவம் பேச்சு நடத்தியது. இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.இதை தொடர்ந்து, டாக்கா பல்கலை வளாகத்திற்குள் தேசிய குடிமக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது பேசிய ஹஸ்னத் அப்துல்லா, “ராணுவத்தினர் கன்டோன்மென்ட் உள்ளே இருந்து மட்டுமே தங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும். நாட்டுக்குள் நுழைந்து அரசியலில் தலையிடக் கூடாது. அதை நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம்,” என்றார்.மாணவர் போராட்டத்தால் டாக்காவில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. ராணுவம், பல்கலைக்குள் செல்லாமல் டாக்கா சாலைகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது.

யூனுசை சந்திப்பாரா மோடி?

இந்தியா, வங்கதேசம், பூட்டான், மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய, 'பிம்ஸ்டெக்' எனப்படும், பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்க கடல் நாடுகளின் மாநாடு, ஏப்., 2 - 4 வரை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது அவரை சந்தித்து பேச்சு நடத்த, வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் விரும்புவதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. இதற்கு, மத்திய அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ram Moorthy
மார் 25, 2025 00:58

ப.தேஷில் தேர்தல் நடந்து வெற்றி பெற்று பிரதமர் ஆனவர் தான் ஹசினா அவர்கள். சைனாவிடம் பணம் வாங்கி கொண்டு ஒரு கும்பலை எவனோ ஒருவனை தலைமை தாங்க வைத்தால் அந்த நாட்டு ராணுவம் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா இப்போது அதற்கு தான் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது ப.தேஷ் ராணுவ நிர்வாகம் விரைவில் பா.தேஷில் ஜனநாயக ஆட்சி மலரும்.


ஆரூர் ரங்
மார் 24, 2025 12:12

ஜனநாயகம் என்பது ஒரு மேற்கத்திய தத்துவம். அது இஸ்லாமிய நாடுகளுக்கு ஒத்துவராது. இஸ்லாமிய அரசுகள் இயங்க கண்மூடித்தனமான கடுமையான சட்டங்கள் உள்ள அரசுதான் சரிவரும் என தாலிபான் தலைவர் பேச்சு. ஆக ராணுவ தலையீடு இல்லாமல் அங்கு ஆட்சி சாத்தியமல்ல.


தாமரை மலர்கிறது
மார் 24, 2025 07:14

பங்களாதேஷில் ராணுவம் தான் யூனுஸ் தலைமையில் ஆட்சிசெய்கிறது. யூனுஸ் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான். அப்புறம் அவரை கீழ தள்ளிவிட்டு இன்னொருவரை ராணுவம் நியமிக்கும். ஏனனில் யூனுஸ் நாட்டை கொள்ளையடிக்க விடமாட்டார். அது ராணுவ தலைவர்களுக்கு ஒருபோதும் பிடிக்காது. அதனால் தான் மாணவர்கள் போராட்டம் ஆரம்பித்து இருக்கிறது. ஆனால் போனமுறை போராடியமாதிரி எளிதாக இந்த தடவை இருக்காது. நேரடி ராணுவ ஆட்சிக்கு சவாலாக எந்த போராட்டமும் வெற்றிபெற்ற வரலாறு இல்லை. ஒருதடவை சொந்த ராணுவத்திடம் ஆட்சி போய்விட்டால், வெளிநாட்டுக்காரனிடமிருந்து கூட சுதந்திரம் பெற்றுவிடலாம். ஆனால் சொந்த ராணுவத்திடம் ஒருநாளும் சுதந்திரம் பெறமுடியாது. பங்காளதேஷின் கதை இனி பாகிஸ்தான் கதையாக தொடரும்.


அப்பாவி
மார் 24, 2025 07:07

கொடியைப்.பாத்தாலே தெரியுது. வெளங்டும்.


Iyer
மார் 24, 2025 06:27

பாக்கிஸ்தான் இந்துக்களை ஈவு இரக்கம் இன்றி கொன்றது, மதம் மாற்றியது, நாட்டை விட்டு வெளியேற்றியது. இன்று பாக்கிஸ்தான் ஒரு "குஷ்டம் பிடித்த பிச்சைக்காரன்" நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பங்களாதேஷ் நாடும் அதேபோல் ஹிந்துக்கள் மீது வெறுப்பால் சீரழிந்துவருகிறது.


Appa V
மார் 24, 2025 04:15

முஸ்லீம் தேசங்களில் ஜனநாயகம் எந்தெந்த நாடுகளில் அமலில் உள்ளன ?


Kasimani Baskaran
மார் 24, 2025 03:54

குறுக்கு வழியில் அமெரிக்காவின் பிரதிநிதி போல பதவியேற்ற யூனுஸை ஏன் சந்திக்க வேண்டும்?


நிக்கோல்தாம்சன்
மார் 24, 2025 02:33

யாரு சொல்லிக்கொடுத்து இப்படி ஆடுறானோ முஸ்னத் அப்துல்லா


புதிய வீடியோ