உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மாணவர் போராட்டத்தால் வங்கதேசத்தில் கொந்தளிப்பு!

மாணவர் போராட்டத்தால் வங்கதேசத்தில் கொந்தளிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா:வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு, 133 பேர் பலியானதை அடுத்து, நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு ராணுவம் ரோந்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v3gjq7mj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 1971ல் பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட்டு வென்று, வங்கதேசம் தனி நாடானது. போரில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.கடந்த 2018ல் நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, இட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது. அதை மீண்டும் அமல்படுத்தப் போவதாக அரசு அறிவித்ததை அடுத்து, மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். எதிர்க்கட்சிகள் துாண்டி விடுவதாக ஆளும் அவாமி லீக் கட்சி கூறியது. அக்கட்சியின் தொண்டர்கள், போராடும் மாணவர்களை தாக்கினர். பல இடங்களில் மோதல் நடந்து, கலவரமாக மாறி தீ வைப்பு சம்பவங்கள் பரவின. அரசு தொலைக்காட்சி நிலையம் எரிக்கப்பட்டது.Gallery

ஜெயில் உடைப்பு

நர்சிங்டி மாவட்டத்தில் சிறையை முற்றுகையிட்ட மாணவர்கள், கதவுகளை உடைத்து 800 கைதிகளை விடுவித்தனர். சிறைக்கு தீ வைக்கப்பட்டது. முக்கிய வங்கிகள், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் இணையதளங்கள் போராட்டக்காரர்களால் முடக்கப்பட்டன. மூன்று நாட்களாக நடந்து வரும் வன்முறையில், இதுவரை 133 பேர் பலியானதாக தெரிகிறது; 1,000 பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளனர். அதில் பாதி பேர் போலீஸ்காரர்கள்.ஊரடங்கு உத்தரவை அடுத்து, கலவரம் செய்வோரை கண்டதும் சுட அரசு உத்தரவிட்டது.அதையும் மீறி, டாக்காவின் ராம்புரா பகுதியில் நேற்று போராட்டம் நடந்தது. போலீசார் சுட்டதில் சிலர் காயம் அடைந்தனர். பள்ளி, கல்லுாரிகள், பல்கலைகள் மூடப்பட்டுள்ளன. டெலிபோன், இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. சேனல்களின் ஒளிபரப்பும் முடக்கப்பட்டுள்ளது.கொந்தளிப்பால், வங்கதேசத்தில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். விமான, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் சாலை மார்க்கமாக சொந்த நாடு திரும்புகின்றனர். நேபாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியா வழியாக தாயகம் செல்கின்றனர். இந்திய மாணவர்களில் 364 பேர் மேகாலயா எல்லை வழியாக நேற்று முன்தினம் திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணம் ரத்து

'வங்கதேசத்தில் சிக்கியுள்ள 4,000க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். இதுவரை 778 மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். மற்ற மாணவர்களும் பாதுகாப்பாக வந்து சேர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என, நம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.கலவர சூழல் தொடர்வதால் ஸ்பெயின், பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல இருந்த பயணத்தை பிரதமர் ஷேக் ஹசீனா ரத்து செய்துள்ளார். இட ஒதுக்கீடு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர மாணவர்களுடன் பேச, அரசு தயாராக உள்ளதாகவும் கூறினார்.

ரத்து

இதனிடையே, போராட்டத்திற்கு காரணமான இந்த இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

என்றும் இந்தியன்
ஜூலை 21, 2024 17:30

கலவர பூமியான வங்காளதேசம்: கண்டதும் சுட உத்தரவிட்ட அரசு... கடுமையான ஊரடங்கு. இது முஸ்லிம்கள் ஆட்சி செய்யுமிடத்தில் நடக்கும்.இந்தியாவில் இதை செய்தால். சர்வாதிகார ஆட்சி. ஆட்சி செய்யத்தெரியவில்லை. மனிதர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று திமுக திரிணாமுல் காங்கிரஸ் முஸ்லீம் நேரு காங்கிரஸ் என்று பலப்பல கட்சிகள் உளருமே மீடியாவில் காலைமுதல் இரவு வரை???இப்போது ஏன் உளறவில்லை. கேட்டல் அது நம்நாடு அல்ல என்று உளறும்???


Sridhar
ஜூலை 21, 2024 13:13

இந்த "பெரும்" போராட்டமெல்லாம் வெறும் 3000 அரசு வேலைகளுக்காக என்று எவ்வளவு பேருக்கு தெரியும்? அதிலும் 30 சதவிகித ஒதுக்கீட்டில், சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினர் பெரும் வாய்ப்போ 900 தான் இதற்க்கு மாணவர்கள் ஏன் இந்த விதத்தில் எதோ அவர்கள் வாழ்வே பாதிக்கப்பட்டது போல் பொங்கி எழவேண்டும்? பங்களாதேஷில் இப்போது நடப்பது வெறும் சோதனை முயற்சிதான் விரைவில் இந்தியாவிலும் இதே போன்ற போராட்டங்கள் துவங்கும். இப்போதே அதற்க்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டன. வேலைக்கு இன்டெர்வியு அதற்க்கு பெரும் கூட்டம் என்று ஒரு செய்தி மீண்டும் மீண்டும் பரப்பப்படுகிறது. நாட்டில் வேலையே கிடைக்கவில்லை என்ற பிம்பம் உருவாக்கப்படும். கூடவே அக்னிவீர் திட்டத்தில் அநியாயம் என்று வேறொரு கும்பல் புறப்படும். அரசு இம்மாதிரியான உள்நோக்கமுடைய புரட்டு போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கவில்லையென்றால், நாடு முன்னேறமுடியாது. ஜனநாயகம் ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டு இந்த தீயசக்திகளை வளரவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால், நாடு சீரழிவது நிச்சயமாகிவிடும். முதலில் மோடி ஊழல் பெருச்சாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயிலில் தள்ளினாலே, இத புரட்டு கும்பல்களை பலவீனப்படுத்திவிடலாம். ஏன் வழக்குகள் மந்தகதியில் நிற்கின்றன? அரசியல் காரணங்களுக்குக்காக இவ்வாறு சமரசம் செய்துகொள்ளலாம் என்று கணக்கு போட்டார்களேயானால், ஆளும் கட்சிக்கும் தேச துரோக சக்திகளுக்கு வித்தியாசமே இல்லை என்று கூறலாம். முதலில் ராவுல் மற்றும் சோனியா மீது உள்ள வழக்குகளை விரைவாக முடிக்கவேண்டும். லாலுவின் பெயிலை ரத்து செய்யவேண்டும். கெஜ்ரிவாலுக்கு விரைவில் தண்டனை கிடைக்க வழக்கை உடனே நடத்தவேண்டும். திராவிட திருட்டு கும்பலை கூண்டோடு சிறையில் அடைக்கவேண்டும். மமடாவை கூட பிறகு பார்த்துக்கொள்ளலாம். மத்திய அரசு விரைந்து செயல்படுமா? தேர்தலுக்கு பிறகு திமுகா காணாமல் போகும் என்று மோடி கூறினாரே? அதை உண்மையாக்குவாரா? இல்லை பதுங்கி சமரசம் செய்துகொள்வாரா?


என்றும் இந்தியன்
ஜூலை 21, 2024 17:35

அதற்கு ஒரே வழிதான் இருக்கின்றது. இந்த சட்டம் கொண்டு வந்தால் எல்லாம் அடங்கிவிடும் . "தவறு கண்டேன் சுட்டேன். சொத்து அரசு கருவூலத்திற்கு மாற்றம்".


Kasimani Baskaran
ஜூலை 21, 2024 08:36

சீனாவால் இது போல பல நாடுகளில் வைத்துச்செய்ய முடியும். தமிழகத்தில் ராக்கெட்டில் சீனக்கொடி போட்டார்களே அது போலவும் செய்வார்கள். கம்முநிச அடக்குமுறை மூலம் தான் முன்னேறிவிட்டு அதே கம்முநிசத்தை வைத்து அடுத்த நாடுகளை நாசம் செய்வது ஒரு வகை அணுகுமுறை. ஆக கம்முநிசம் ஜனநாயக நாட்டுக்கு தேவையில்லை. தடை செய்து கட்சியின் சொத்துக்களை நாட்டுடமையாக்க வேண்டும். ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் கம்மிகளையாவது கம்முநிச நாடுகளுக்கு நிரந்தரமாக குடிபெயர ஒரு நிதியை உருவாக்கலாம்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை