உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய துாதருக்கு சம்மன்

இந்திய துாதருக்கு சம்மன்

இந்திய துாதருக்கு சம்மன்

இந்திய துாதருக்கு சம்மன்

துறவி சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஹிந்து சங்கர்ஷ் சமிதியை சேர்ந்த தன்னார்வலர்கள், திரிபுராவின் அகர்தலாவில் உள்ள வங்கதேச துணை துாதரகம் முன், நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். அப்போது, துணை துாதர் அலுவலகத்துக்குள் ஏழு பேர் அத்துமீறி நுழைந்தனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்த மூன்று எஸ்.ஐ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கிடையே, வங்கதேசத்தில் உள்ள இந்திய துாதரகத்தின் துாதர் பிரணய் வர்மாவை, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகத்துக்கு நேரில் வரவழைத்து, திரிபுராவில் துாதரக அலுவலகத்தில் நடந்த பாதுகாப்பு மீறல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பிரணய் வர்மா கூறுகையில், ''ஒரு சில சம்பவங்களால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது,'' என்றார். இந்நிலையில், திரிபுராவில் உள்ள வங்கதேச துணை துாதரக அலுவலகத்தில் விசா வழங்கும் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ