மேலும் செய்திகள்
லிபியா ராணுவ தளபதி துருக்கி விமான விபத்தில் பலி
8 minutes ago
அமெரிக்க பொருளாதார வளர்ச்சி 4.30%
32 minutes ago
தைபே: தைவானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள்: கிழக்கு ஆசிய நாடான தைவானின், கடலோர மாவட்டமான தைதுங்கில் நேற்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 6.1ஆக பதிவானதாக தைவான் மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி தைதுங் மாகாணத்தின் வடக்கே 11.9 கி.மீ., ஆழத்தில் அமைந்திருந்தது. இதனால், தலைநகர் தைபேயில் வீடுகள், கடைகள், அலுவலகங்கள் குலுங்கின. அங்கிருந்த பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் சிதறி விழுந்தன. அங்கிருந்த மக்கள் பீதியடைந்ததுடன், அவசர அவசரமாக வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். பசிபிக் பெருங்கடலின் பெரும்பாலான பகுதிகளைச் சுற்றியுள்ள ' ரிங் ஆப் பயர்' என, அழைக்கப்படும் புவித்தட்டுப் பகுதியில் தைவான் அமைந்துள்ளது. இதனால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம்.
8 minutes ago
32 minutes ago