உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ‛நேட்டோ அமைப்பின் தலைவராகிறார் நெதர்லாந்து பிரதமர்

‛நேட்டோ அமைப்பின் தலைவராகிறார் நெதர்லாந்து பிரதமர்

பிரசெல்ஸ்: ‛‛நேட்டோ'' அமைப்பின் தலைவராக (செகரட்டரி ஜெனரல்) நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தேர்வு செய்யப்பட்டார். ‛நேட்டோ' எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு, பெல்ஜியம் நாட்டின் தலைவர் பிரசெல்ஸ் நகரில் உள்ளது. 32க்கும் மேற்பட்ட நாடுகள் இவ்வமைப்பில் உறுப்பினராக உள்ளன. உறுப்பு நாடுகள் இணைந்த ஒரு ராணுவ அமைப்பான நேட்டோ அமைப்பின் தற்போதைய தலைவராக (செக்ரட்டரி ஜெனரலாக ) ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் உள்ளார். வரும் அக்டோபரில் இவரது பதவி காலம் நிறைவடைகிறது. இதைடுத்து புதிய தலைவர் பதவிக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர்.இதில் அமெரிக்க ஆதரவு பெற்ற நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே , நேட்டோ அமைப்பின் தலைவராக (செகரட்டரி ஜெனரலாக ) தேர்வு செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்