உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாள பிரதமர் பதவி பறிபோனதற்கான காரணம்: சர்மா ஒலி புலம்பல்

நேபாள பிரதமர் பதவி பறிபோனதற்கான காரணம்: சர்மா ஒலி புலம்பல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காத்மாண்டு: நேபாள பிரதமர் பதவியில் இருந்து விலகியதற்கு அயோத்தி கோயிலுக்கு எதிரான நிலைப்பாடு, லிபுலேக் பிரச்னை ஆகியவையே காரணம் என பிரதமர் பதவியில் இருந்து விலகிய கே.பி.சர்மா ஒலி கூறியுள்ளார்.சமூக வலைதளங்கள் மீதான தடை, நாட்டில் நிலவிய ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிராக கோபம் அடைந்த மாணவர்கள் நேபாளத்தில் போராட்டத்தில் இறங்கினர். அவர்களின் போராட்டத்தை ராணுவத்தாலும், போலீசாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் இல்லங்கள் தீவைக்கப்பட்டன. பல அமைச்சர்கள் , முன்னாள் பிரதமர்கள் மாணவர்களின் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதனால் அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலகினர்.பிரதமர் பதவியில் இருந்து விலகிய கே.பி.சர்மா ஒலி ராணுவ பாதுகாப்பில் உள்ளார். அவர் கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: லிபுலெக் பிரச்னையை உரிமை கொண்டாடாமல் இருந்து இருந்தால் நான் பதவியில் நீடித்து இருந்திருப்பேன். கடவுள் ராமர் குறித்து நான் தெரிவித்த கருத்தால் எனது பதவி பறிபோனது எனத் தெரிவித்துள்ளார்.நமது அண்டை நாடான நேபாளம் சிக்கிம், மேற்கு வங்கம், பீஹார், உபி மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. உத்தரகாண்டின் லிபுலெக் பகுதியை நேபாளம், ' எங்களுக்கு சொந்தமானது' என உரிமை கொண்டாடி வருகிறது. இதனை மத்திய அரசு நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Chandrasekaran Balasubramaniam
செப் 11, 2025 09:55

Yes.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 11, 2025 09:32

பதவிக்கு வரும் நபர்கள் தர்மத்தின் வழி நடப்பேன் என்பதுடன், அவ்வாறு நடக்க தவறும் பட்சத்தில் பொது மக்கள் எந்த நேரமும் தன்னை ...சம்மதம் என்றும் உறுதிமொழி ஏற்க வேண்டும்.


raja
செப் 11, 2025 08:35

நான் சேலத்தில் ஒரு தனியார் பிள்ளையார் பெயர் கொண்ட பல்கலைகழகத்தில் வேலை செய்த போது பெரும்பாலான மாணவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் . அவர்கள் கல்லூரிக்கு வருவது மிக குறைவு...ஏதேனும் கல்லூரியில் பிரச்சனை என்றால் அன்று மட்டும் நூறு சத வருகை பதிவேடு இருக்கும். இடைவேளையின் போது அந்த மாணவர்கள் ஒன்றுகூடி அனைத்தையும் அடித்து நொருக்குவார்கள்... காவல் துறை வந்தாலும் கட்டு படுத்த முடியாது... இது கம்மிகளுக்கே உள்ள அராஜக குணம் என்பதை அப்பொழுது தெரிந்து கொண்டேன் ...


duruvasar
செப் 11, 2025 08:15

காரணத்தை சொல்லித்தானே போராட்டத்தை நடத்தினார்கள்.பல்லு போயியும் லொள்ளு போகலை. . இவர் திருந்த வாய்ப்பேயில்ல.


Sun
செப் 11, 2025 07:19

இவர் என்ன சொல்ல வருகிறார்? நேபாளில் நடந்த கலவரத்திற்கு இந்தியாதான் காரணம் என மறைமுகமாக சொல்கிறாரா?


சிட்டுக்குருவி
செப் 11, 2025 03:51

ஊழலும் வாரிசு அரசியலும்தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது .


தாமரை மலர்கிறது
செப் 11, 2025 01:35

ஒரு சின்ன கூட்டத்தை கட்டுப்படுத்த வக்கற்ற கம்யூனிஸ்ட்கள். போராட்டத்தில் நிதி அமைச்சரையே ஒருவர் உதைக்கிறார். என்ன மாதிரியான கையாலாகாத அரசு இது? மெரினா, ஸ்டெர்லைட் போராட்டத்தை கட்டுப்படுத்திய எடப்பாடி அளவுக்கு கூட திறமை இல்லாத நேபால் அரசு. ஆவேசமான யோசிக்காத மக்கள் தறிகெட்டு சட்டத்தை கையிலெடுத்துக்கொள்ள ஒருக்காலும் அனுமதிக்க முடியாது. அரசு தான் இரும்புக்கரம் கொண்டு அடித்து உதைத்து சுட்டு கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் நாடு ஆப்பிரிக்கா ஆகிவிடும். அனைத்து பிஸிநெஸ்களும் ஓடிவிடும்.


Raja k
செப் 11, 2025 00:10

உங்க நாட்டு கலவரங்களுக்கு பின்னால், சீனா, அமெரிக்கா உள்ளது,


RAJ
செப் 11, 2025 00:07

சரி விடுடா... உன்னால நேபாளத்துக்கு ஒரு பிரயோஜனமும் இல்ல...கொஞ்சம் ரெஸ்ட் எடுடா..


சமீபத்திய செய்தி