உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்ய ராணுவத்திற்கு உதவிய 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை

ரஷ்ய ராணுவத்திற்கு உதவிய 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை

பிரஸ்சல்ஸ் : ரஷ்ய ராணுவத்திற்கு உதவும் வகையில் செயல்பட்ட மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட 45 நிறுவனங்களுக்கு, ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் நடந்து வருகிறது. இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவிற்கு அழுத்தம் தரும் வகையில், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை ஐரோப்பிய யூனியன் விதித்தது. இதற்கிடையே, ரஷ்யாவிற்கு பொருளாதார ரீதியில் உதவும் நிறுவனங்கள் மீதும் இத்தடையை இந்த அமைப்பு நீட்டித்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, ரஷ்ய ராணுவத்தின் இயந்திர கருவிகள், ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் போன்ற ஆயுத அமைப்பிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவும் வகையில், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இதையடுத்து, அந்நிறுவனங்களை கண்டறிந்து, அதன்மீதும் நடவடிக்கையை ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டுள்ளது.இதன்படி, 45 நிறுவனங்களுக்கு தடை விதித்து, அந்த அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இதில், நம் நாட்டைச் சேர்ந்த, 'ஏரோட்ரஸ்ட் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட், அசென்ட் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ என்டர்பிரைசஸ்' ஆகிய மூன்று நிறுவனங்கள் அடங்கும். இதுதவிர, இப்பட்டியலில் சீனாவை சேர்ந்த, 12 நிறுவனங்கள், தாய்லாந்தை சேர்ந்த இரண்டு நிறுவனங்களும் இடம் பிடித்துள்ளன. எனினும், இந்நிறுவனங்கள், ரஷ்யாவுடன் எத்தகைய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டன என்பது தொடர்பான விபரங்களை ஐரோப்பிய யூனியன் அமைப்பு இதுவரை வெளியிடவில்லை. இதேபோல், இந்நடவடிக்கை பற்றி மத்திய அரசும் தன் கருத்தை தெரிவிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Apposthalan samlin
அக் 25, 2025 11:25

அமெரிக்கா சொன்னதுக்கு ஆக ஆயில் வாங்குவதை நிப்பாட்டாச்சு *இந்தியா நிறுவனங்கள் மீது தடை இந்தியா ஏன் வாய் மூடி சும்மா இருக்கிறது .


Anand
அக் 25, 2025 10:47

அப்படியானால் அமெரிக்கா தொடர்ந்து தன்னோட அணுஉலைகளுக்கு ரஷ்யாவிடம் இருந்து சில எரிபொருள்களை இறக்குமதி செய்வது குற்றமாகாதா? இளைத்தவனுக்கு ஒரு நியாயம் பெருத்தவனுக்கு ஒரு நியாயமா?


பேசும் தமிழன்
அக் 25, 2025 09:57

போர் யாரால் தொடங்கப்பட்டது.... யாரெல்லாம் உக்ரைன் நாட்டுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவி செய்கிறார்கள்.... அதாவது சண்டையை நீட்டிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள் (அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள்) என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.


Kalyanaraman
அக் 25, 2025 07:48

இவ்வளவு படு முட்டாள்களாக இருக்கிறார்களே.. ஆனால் மற்ற நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எதுவும் வாங்கக்கூடாது. எவ்வளவு அராஜகமாக இருக்கிறது.


Kasimani Baskaran
அக் 25, 2025 05:48

அப்படியென்றால் டிரம்ப்க்கு கூட தடை விதிக்கவேண்டும்.


N Sasikumar Yadhav
அக் 25, 2025 01:39

ஐரோப்பிய நாடுகளும் அமிரிக்காவும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொடுப்பதை நிறுத்தினால் போர் நின்றுவிட போகிறது . இவனுங்க புதிதாக கண்டுபிடிக்கிற ஆயுதங்களை ரஷ்யா மீது விட்டு சோதித்தால் போர் எங்கிருந்து நிற்கும்


Ramesh Sargam
அக் 24, 2025 23:24

இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட பாகிஸ்தானுக்கு எப்பொழுதும் ராணுவ உபகரணங்களை கொடுத்து உதவும் அமெரிக்கா, சீனா நிறுவனங்களுக்கும் தடை விதிப்பீர்களா?


புதிய வீடியோ