உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவுக்குள் ஊடுருவிய மூன்று இந்தியர்கள் கைது

அமெரிக்காவுக்குள் ஊடுருவிய மூன்று இந்தியர்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: பொருளாதார காரணங்களுக்காக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற நினைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அமெரிக்காவைச் சுற்றி உள்ள ஏழை நாடுகளான மெக்சிகோ, கியூபா, டொமினிக் குடியரசு மட்டு மின்றி, நம் நாட்டிலிருந்தும் பலர் ஏஜன்ட்களை நம்பி சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேற முயற்சிக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் எல்லை நாடான கனடாவில் இருந்து, மூன்று இந்தியர்கள் மற்றும் டொமினிக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஒருவர் என, நான்கு பேர் சரக்கு ரயில் வாயிலாக சமீபத்தில் அமெரிக்காவுக்குள் நுழைந்தனர். இவர்களில் ஒருவர் பெண். அந்த ரயில் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம், பப்பல்லோ நகரில் சென்று கொண்டிருந்த போது, நான்கு பேரும் ஒரு பாலத்தில் இருந்து கீழே குதித்தனர். இதை அங்கு ரோந்து பணியிலிருந்த எல்லை ரோந்து படையினர் பார்த்துவிட்டனர்.அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர். அதில் இந்திய பெண்ணுக்கு கால் முறிவு ஏற்பட்டிருந்ததால், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற மூவரையும் சிறைக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தாமரை மலர்கிறது
மார் 16, 2024 00:23

என்ன வளம் இல்லை பிஜேபி ஆளும் இத்திருநாட்டில், ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில்?


கர்ணன் கர்மபுரம்
மார் 15, 2024 14:47

இக்கரைக்கு அக்கரை பச்சை. அமெரிக்காவில் குதித்த பின் கண்டிப்பாக வருந்துவார்கள். நாம் சினிமாவில் பார்க்கும் அமெரிக்கா வேறு உண்மையான அமெரிக்காவேறு. அங்கு வாழ்க்கை மிகவும் கடினம். நம்ம ஊர் அதற்கு பரவாயில்லை


venugopal s
மார் 15, 2024 11:13

அவர்கள் அநேகமாக குஜராத் அல்லது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் இத்துடன் செய்தி முடிந்தது. இதே தமிழர்களாக இருந்தால் போதைப்பொருள் கடத்திக் கொண்டு அமெரிக்கா சென்றனர் என்று கதை கட்டி இருப்பார்கள்.


VENKATASUBRAMANIAN
மார் 15, 2024 08:13

இங்கே சிஏஏஐ எதிர்க்கின்றனர். அங்கே யாரும் உள்ளே போகமுடியாது. இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இதற்கு ஆதரவு தரும் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் திமுக போன்ற கட்சிகள்.


தஞ்சை மன்னர்
மார் 15, 2024 11:20

நாள்ல பாருங்க அது இங்கேர்ந்து வாழ வழியில்லாமல் தப்பி ஓடிய குஜராத்தியாக இருக்கும்


Ramesh Sargam
மார் 15, 2024 06:12

அமெரிக்காவுக்கு வந்தால் வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடுமா? இந்தியாவில் தினம் ஒரு நூறு அல்லது இருநூறு ரூபாய் கிடைத்தாலும் நிம்மதியாக இருக்கலாம். அமெரிக்காவில் அது முடியுமா? மேலும் இங்கு குளிர் காலத்தில் குளிரில் உறைந்து சாகவேண்டும்.


தஞ்சை மன்னர்
மார் 15, 2024 11:20

அண்ணனுக்கு அமெரிக்கா க்ரீன் கார்ட் கொடுக்கவில்லை என்ற கோபம் போல


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி