உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சி; பிரிக்ஸ் அமைப்பு மீது டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சி; பிரிக்ஸ் அமைப்பு மீது டிரம்ப் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சி செய்கிறது'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.இது குறித்து வெள்ளை மாளிகையில், நிருபர்கள் சந்திப்பில் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: பிரிக்ஸ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும். வளர்ந்து வரும் பொருளாதார கூட்டமைப்பு வேகமாக மறைந்து வருகிறது. பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சி செய்கிறது. அவர்கள் விரைவில் முடிவுக்கு வருவார்கள். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o3tiig0a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பொருளாதார சவால்

எங்களுடன் விளையாட யாரையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பிரிக்ஸ் அமைப்பினர் டாலரை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். எங்களுடன் விளையாட யாரையும் நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. பிரிக்ஸ் அமைப்பிற்கு ஒரு கடுமையான பொருளாதார சவாலை எதிர்க்கொள்ளும் ஒற்றுமை இல்லை. நாங்கள் நிறைய போர்களை நிறுத்தினோம். இந்தியாவும், பாகிஸ்தானும் தீவிரமாக மோதிக் கொண்டிருந்தன.

அணுசக்தித் திறன்

இவை இரண்டு தீவிர அணு ஆயுத நாடுகள், அவை ஒன்றையொன்று மோதிக் கொண்டிருந்தன. சமீபத்தில் ஈரானில் நாம் என்ன செய்தோம் என்பதைப் பார்த்தபோது, அவர்களின் அணுசக்தித் திறனை நாங்கள் தகர்த்து, அதை முற்றிலுமாகத் தகர்த்துவிட்டோம்.ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் அதை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. அது பெரிதாகிக் கொண்டே இருந்தது. வர்த்தகத்தின் மூலம் அதைத் தீர்த்து வைத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 19, 2025 12:35

என்னிடம் டாலர், யூரோ, ரூபிள், யென், பவுண்ட், யுவான் என பல நாட்டு பணம் இருக்கும். எந்த நாட்டுடன் எந்த நாட்டு பணத்தை வைத்து வியாபாரம் செய்யவேண்டும் என்பது என்னுடைய மற்றும் என்னுடன் வியாபாரம் செய்யும் நாட்டின் தனிப்பட்ட முடிவு. டாலர் பயன்படுத்தி மட்டும்தான் உலகில் வியாபாரம் நடக்க வேண்டும் என்று சொல்வது இனி நடக்காது, நடக்கவும் கூடாது. இந்து அமெரிக்க பூனைக்கு பெரிய காண்டாமணி ஒன்றை கழுத்தில் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கு சீனா மட்டுமே தற்போது தடையாக இருப்பது ஆச்சரியம், ஆனால் உண்மை.


Ganapathy
ஜூலை 19, 2025 12:20

பலமுறை எடுத்துக் கூறியும் சிறிதும் புரிதல் இல்லாமல் சிறுமதியுடன் பேசும் நீர் ஒரு ஆகச்சிறந்த சிறந்த அறவீலியேதான்


Ganesh
ஜூலை 19, 2025 11:22

எனக்கு தெரிந்து ஏதோ டாலற்கு எதிராக பிரிக்ஸ் நாடுகள் பிளான் பண்ணி விட்டார்கள்... இந்த அமைதி திரைக்கு பின்னால் நடக்கும் மிகப்பெரிய புயலுக்கு முன்னாள் வரும் அமைதி.... சீனா மற்றும் ரஷ்யா சேர்ந்து பிரிக்ஸ் நாடுகள் சார்பாக ஒரு நாள் இதை அறிவிக்கும்... அப்போது சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு டாலர் மற்றும் அமெரிக்கா பொருளாதாரம் சரியும்...உலகமே அமெரிக்கா விதித்த வரிகளினால் பாதித்து அதற்கு எற்றார் போல் தங்களை தங்களே சுயமாக காப்பாற்றிக்கொள்ள தயார் படுத்தி கொண்டு உள்ளதால் மிகப்பெரிய பாதிப்பு உலக நாடுகளுக்கு ஏற்படாது


Narayanan
ஜூலை 19, 2025 10:14

காலத்தின் கட்டாயம் . அமெரிக்கா டாலரின் ஆதிக்கத்தை வலுவிழக்கச்செய்யத்தான் வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை