உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா மீது 25 சதவீத கூடுதல் வரி மொத்தம் 50% வரி விதித்தார் டிரம்ப்

இந்தியா மீது 25 சதவீத கூடுதல் வரி மொத்தம் 50% வரி விதித்தார் டிரம்ப்

வாஷிங்டன்:விதித்த கெடு நிறைவடைவதற்குள், அமெரிக்காவில் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை இருமடங்காக அதிகரித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். நேற்று முன்தினம் வரை 25 சதவீதமாக இருந்த வரி, இனி 50 சதவீதமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய கூட்டமைப்பால் அமெரிக்கா சந்திக்கும் மிரட்டல்களுக்கான தீர்வு என்ற பெயரிலான உத்தரவில் டிரம்ப் நேற்றிரவு கையெழுத்திட்டார். ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக அதில் தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t2l72zvn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியாவுக்கு ஏற்கனவே விதித்த, 25 சதவீத வரி இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக அவர் விதித்துள்ள 25 சதவீத வரி, 21 நாட்களில், அதாவது, வரும் 27ல் அமலுக்கு வரும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடியாகவோ, மறைமுகமாகவே ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தெரிய வந்துள்ளது என்றும் அதனால், அமெரிக்காவுக்கு இந்தியா அனுப்பும் பொருட்களுக்கு கூடுதல் வரி 25 சதவீதம் பொருந்தும் என்று தனது உத்தரவில் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பால், அமெரிக்காவில் அதிக இறக்குமதி வரி விதிப்புக்கு உள்ளாகும் நாடுகளில், பிரேசில், இந்தியா அதிகபட்சமாக 50 சதவீத வரியை எதிர்கொள்கின்றன. மியான்மர் 40, தாய்லாந்து, கம்போடியா தலா 36, வங்கதேசம் 35, இந்தோனேஷியா 32, இலங்கை, சீனா தலா 30 சதவீதம் வரி விதிப்பை சந்திக்கின்றன. அமெரிக்கா, இந்தியா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, ஆறாம் கட்ட பேச்சு நடத்த, வரும் 25ம் தேதி அமெரிக்க குழு இந்தியா வரவுள்ள நிலையில், கூடுதல் வரி விதிப்பான 25 சதவீதம் 27 ம் தேதி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிக்கக் கூடிய துறைகள் ஜவுளி, ஆய்தத ஆடை ரத்தினங்கள், நகைகள் இறால் தோல், காலணிகள் விலங்கு பொருட்கள் ரசாயனங்கள் மின்னணு மற்றும் இயந்திர உபகரணங்கள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளவை மருந்து பொருட்கள் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் இயற்கை எரிவாயு நிலக்கரி, மின்சாரம் முக்கிய தாதுக்கள் கணினி, டேப்லெட், ஸ்மார்ட்போன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி