உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தென் சீனக்கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க விமானம், ஹெலிகாப்டர்!

தென் சீனக்கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க விமானம், ஹெலிகாப்டர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹவாய்: தென் சீனக்கடல் பகுதியில் அமெரிக்காவின் போர் விமானமும், கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரும் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின. தெற்கு சீனக் கடல் பகுதி மிகவும் சர்ச்சை மிகுந்த பகுதியாகும். இந்தக் கடல் பகுதியை சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே மற்றும் தைவான் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில், தெற்கு சீனக்கடலில் அமெரிக்காவின் போர் விமானமும், கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரும் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின. நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.45 மணியளவில் அமெரிக்க ஏவுகணை விமானம் தாங்கிக் கப்பல் யுஎஸ்எஸ் நிமிட்ஸில் இருந்த எம்எச் 60ஆர் சீ ஹாக் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில், இருந்த 3 விமானிகள் பத்திரமாக வெளியேறினர். இதைத் தொடர்ந்து, பிற்பகல் 3:15 மணியளவில், எப்ஏ-18 எப் சூப்பர் ஹார்னெட் போர் விமானமும் விபத்துக்குள்ளானது. இதில், இந்த 2 விமானிகளும் பத்திரமாக வெளியேறி உயிர்பிழைத்தனர். இந்த அடுத்தடுத்த விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் சீன அதிபரை சந்திக்க உள்ள நிலையில், அமெரிக்காவின் ஹெலிகாப்டரும், விமானமும் அடுத்தடுத்து தெற்கு சீனப்பகுதியில் விபத்துக்குள்ளாகியிருப்பது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
அக் 27, 2025 23:27

அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் சீன அதிபரை சந்திக்க உள்ள நிலையில், அவருக்கு ஒரு சின்ன வரவேற்பு. ஆனால் அந்த வரவேற்பை கொடுத்தது எந்த நாடு?


KOVAIKARAN
அக் 27, 2025 17:01

அப்படியெல்லாம் இருக்காது. எங்கள் கடல்பகுதியையே உளவு பார்க்க போர் விமானத்தை நீ அனுப்புகிறாயா என்று அமெரிக்காவிடம் கேட்காமல் சீன கேட்டுள்ளது. இது சீனாவின் வேலையாகவும் இருக்கலாம்.


Bullet
அக் 27, 2025 13:51

எல்லாமே செட்டப். விபத்திற்குள்ளான விமானத்தில் வேவு பார்க்கும் கருவிகள் வைக்கப்பட்டு, சேட்டிலைட் அந்த வான் பகுதிக்கு வந்து வேவு பார்க்க தொடங்கும்


Vasan
அக் 27, 2025 12:19

வரிக்கு பழியா?


அருண், சென்னை
அக் 27, 2025 11:39

வினை விதைத்தவன் வினையருப்பான்...CIA ஏஜென்ட் அனுப்புனியே...


ASIATIC RAMESH
அக் 27, 2025 11:10

விரைவில் நல்லது நடக்கட்டும்.... உலகை மிரட்டும் தீய சக்திகளின் ஆட்டம் அடங்கட்டும்.


duruvasar
அக் 27, 2025 10:46

அளவோடு ஆடணும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை