உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கலிபோர்னியாவில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க கடற்படை போர் விமானம்

கலிபோர்னியாவில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க கடற்படை போர் விமானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கலிபோர்னியா: அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான எப்-35சி ரக போர் விமானம், பயிற்சியின் போது கலிபோர்னியாவில் கீழே விழுந்து நொறுங்கியது.மத்திய கலிபோர்னியாவின் ப்ரெஷ்னோ நகரில் இருந்து தெற்கு மேற்கு பகுதியின் 64 கிலோ மீட்டர் தொலைவில் கடற்படைக்கு சொந்தமான லீமோர் கடற்படை விமான தளம் அமைந்துள்ளது. இங்கு எப்-35சி ரக போர் விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக விமானி வெளியே குதித்து உயிர் தப்பினார்.எப்-35சி ரக விமானங்கள், பயிற்சி மற்றும் போரின் போது பயன்படுத்தப்படுகிறது. கடற்படையின் வி.எப் 125 ரப் ரைடர்ஸ் எனப்படும் பயிற்சி படைப்பிரிவினர் எப்-35 ரக போர் விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த விமானம் விபத்தில் சிக்கியது. இது குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜூலை 31, 2025 12:25

ஆக விமான விபத்து என்பது உலகில் உள்ள எந்த நாடுகளிலும் நடக்கலாம். இந்தியாவின் ஏர் இந்தியா விமானம் மட்டும் விபத்துக்குள்ளாகாது.


கண்ணன்
ஜூலை 31, 2025 11:33

F35 என்பது ஒரு காயலான் கடை சமாச்சாரம் என்பதை நாம் ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டோமே!


Columbus
ஜூலை 31, 2025 11:05

In such accidents our pilots rarely survive. Should learn survival tricks from US pilots.


Ganapathy
ஜூலை 31, 2025 12:09

எதுக்கு ட்ரம்ப் ஊர் முழுக்க சொல்லிகிட்டு திரியவா?


SUBBU,MADURAI
ஜூலை 31, 2025 10:51

இந்த செய்தியை படித்தவுடன் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை