உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்; அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்கக் குழு

தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்; அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்கக் குழு

புதுடில்லி: தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கக் குழு அடுத்த வாரம் இந்தியா வர முடிவு செய்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்தக் கோரி இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 0 சதவீதம் வரை கூடுதல் வரியை விதித்தார். ஆனால், டிரம்ப்பின் இந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளாத இந்தியா, ரஷ்யாவுடன் எண்ணெய் பொருட்களை கொள்முதல் செய்வதுடன், அந்நாட்டுடனான உறவையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. இந்த சூழலில், 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் நேற்று இந்தியா வந்தார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பயணத்தின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இது அமெரிக்காவுக்கு உச்சகட்ட அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கூடுதல் வரி விதிப்பால் இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக அமெரிக்க பிரதிநிதி ரிக் ஸ்விட்சர் தலைமையிலான குழுவினர் அடுத்த வாரம் இந்தியா வர முடிவு செய்துள்ளது. இதனால், இந்தாண்டு இறுதிக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நம்பப்படுகிறது.இது குறித்து இந்திய வர்த்தக செயலர் ராஜேஷ் அகர்வால் கூறியதாவது; நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த ஆண்டிற்குள் ஒரு தீர்வு காணப்படும் என்று நம்புகிறோம். முதலில் வரி பிரச்னைகளை சரி செய்யும் விதமாக வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை