உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா உடன் அமெரிக்கா வர்த்தகம்; இந்தியா குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதிலளிக்காமல் நழுவல்!

ரஷ்யா உடன் அமெரிக்கா வர்த்தகம்; இந்தியா குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதிலளிக்காமல் நழுவல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து யுரேனியம், உரங்களை அமெரிக்கா இறக்குமதி செய்ததாக இந்தியா கூறியது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ' எனக்கு எதுவும் தெரியாது' என அதிபர் டொனால்டு டிரம்ப் பதிலளித்துவிட்டு நழுவி சென்றார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்து வருகிறார். தற்போது அவரது கவனம் இந்தியா மீது திரும்பி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tnue4m2o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த இரு தினங்களாக இந்திய பொருளாதாரம் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.அதுமட்டுமின்றி, இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி என்று டிரம்ப் அறிவித்தார்.இந்தியா ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்குவது மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெயில் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு விற்கிறது. ரஷ்ய போர் இயந்திரத்தால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது அவர்களுக்கு கவலையில்லை என டிரம்ப் கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார்.இதற்கு மத்திய அரசு கடும் பதிலடியையும், கடும் எதிர்ப்பையும் பதிவிட்டது.ரஷ்யாவிடம் யுரேனியம், உரங்களை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது என்று இந்தியா திட்டவட்டமாக கூறி இருந்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அதிபர் டிரம்பிடம் ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

கேள்வி இதோ!

அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம் மற்றும் உரங்களை வாங்குவதாக இந்தியா கூறுகிறது, அதற்கு உங்கள் பதில்?

நழுவல்

'எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது. நாங்கள் சரிபார்க்க வேண்டும்' என்று பதில் அளித்துவிட்டு டிரம்ப் நழுவி சென்றார்.மேலும் டிரம்ப் கூறியதாவது: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அதிகரிக்கப்பட்ட வரி விகித சதவீதம் என்ன என்பதை நான் தெரிவிக்கவில்லை. அடுத்து வரக்கூடிய குறுகிய நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். இவ்வாறு டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Nagarajan S
ஆக 06, 2025 19:22

உலக நாடுகளை அடிமைப்படுத்த ட்ரம்ப் முயலுகிறார். அது ஒருபோதும் நடக்காது.


ManiK
ஆக 06, 2025 18:42

அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து ஏற்றுமதி செய்வது நிரூபிக்கப்பட்டால் இந்த டிரம்ப் அமெரிக்காவுக்கும் 25% வரி விதிப்பார். உன் நாட்ட முதல்ல சரிசெஞ்சிட்டு இந்தியா பக்கம் வா டொனால்டு ராசா...


Anand
ஆக 06, 2025 18:31

Drunken Monkey holding explosives என்கிற பழமொழி இவருக்கு பொருந்தும்.


Karthik Madeshwaran
ஆக 06, 2025 17:39

யுரேனியம், ரசாயனங்கள். உரங்கள் போன்றவை அமெரிக்கா, ரஷ்யாவிலிருந்து பல ஆயிரம் கோடி டாலர்களுக்கு இறக்குமதி செய்கிறது.அமெரிக்க மட்டும் அல்ல, பல ஐரோப்பிய நாடுகளும் இன்று வரை வாங்கி கொண்டுள்ளது. அது தப்பில்லை, ஆனால் நாம் எண்ணெய் வாங்குவது மட்டும் தவறாம்.தான் சொல்வதை தான் அனைத்து நாடுகளும் கேட்க வேண்டும் என்று மறைமுகமாக வரி விதித்து அடக்க நினைக்கிறது அமெரிக்கா.


SUBRAMANIAN P
ஆக 06, 2025 17:22

ரஷ்யாவிலிருந்து இறக்குமதி ஆவது உனக்கு தெரியவில்லையென்றால் என்னத்துக்கு நீ அமெரிக்கா அதிபரா இருக்க...


Madras Madra
ஆக 06, 2025 17:18

இந்தியா எப்பவும் இளிச்ச வாயாகவே இருந்தது ஆனால் மோடி அரசு அப்படி இல்லை ஏனென்றால் மோடி RSS


peermohammednurullaraja peermohammednurullaraja
ஆக 06, 2025 17:15

டிரம்ப் பதவி விலகனும்


M. PALANIAPPAN, KERALA
ஆக 06, 2025 16:48

உலக நாடுகள் அனைத்தையும் அடக்கி ஆள அமெரிக்காவுக்கு என்ன அதிகாரம் உள்ளது


K V Ramadoss
ஆக 06, 2025 16:33

ரஷ்யாவிடம் அமெரிக்கா வர்த்தகம் செய்வது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லும் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இன்னம் இருக்க லாயக்கு ஆனவரா ?


Anand
ஆக 06, 2025 18:32

நம்ம தத்திகள் போல இவனும் கூறுகெட்டவன்......


Ramalingam Shanmugam
ஆக 06, 2025 16:15

கள் குடித்த குரங்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை