உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆட்சியை தக்க வைப்பாரா ரிஷி சுனக்: பிரிட்டனில் பொதுத்தேர்தல் துவங்கியது

ஆட்சியை தக்க வைப்பாரா ரிஷி சுனக்: பிரிட்டனில் பொதுத்தேர்தல் துவங்கியது

லண்டன்: பிரிட்டன் பார்லிமென்டிற்கு பொதுத் தேர்தல் துவங்கி நடந்து வருகிறது. இதனையடுத்து பிரதமர் பதவியை ரிஷி சுனக் தக்க வைப்பாரா அல்லது பறி கொடுப்பாரா என்பது விரைவில் தெரியவரும்.பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியை சேர்ந்த 5 பேர் பிரதமர் பதவி வகித்தனர். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதும் போரீஸ் ஜான்சன் பிரதமர் பதவியேற்றார். அவர் பதவி விலகியதை அடுத்து லிஸ் டிரஸ் பிரதமர் ஆனார். 2022 ல் பதவி விலகியதால், இந்திய வம்சாளவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமர் ஆக பதவியேற்றார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது. ஆனால், பார்லிமென்ட் முன்கூட்டியே கலைக்கப்பட்டது. இன்று ஜூலை 4ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.இதையடுத்து மொத்தமுள்ள 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பார்லிமென்டிற்கு தேர்தல் துவங்கி நடந்து வருகிறது. இத்தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும். மற்றொரு கட்சியான, கெயிர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது. லிபரல் ஜனநாயக கட்சி, சீர்திருத்த யுகே கட்சி, ஸ்காட்டிஸ் தேசிய கட்சி கிரீன் கட்சி ஆகியவையும் தேர்தல் களத்தில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்புசாமி
ஜூலை 04, 2024 19:04

அங்கே கருத்துக்.கணிப்பு உண்மையா இருக்கு. தொழிற்கட்சி வெற்றி பெறும்னு சர்வே சொல்லுது. டுபாக்கூர் கருத்து கணிப்பெல்லாம் இந்தியாவிலேதான் நடக்கும்.


Swaminathan L
ஜூலை 04, 2024 18:11

பொருளாதாரப் பின்னடைவு, கோவில் 19ன் தாக்கத்திலிருந்து இங்கிலாந்து மீள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறது என்று தகவல். ஐரோப்பாவில் வலதுசாரி கட்சிகளுக்கு இப்போது இருக்கும் மவுசு இங்கிலாந்திலும் எதிரொலித்த ஆல் சுனக் கட்சி ஆட்சி அமைப்பது கடினமாகும்.


Ramesh Sargam
ஜூலை 04, 2024 17:19

மக்கள் முடிவு ரிஷிக்கு சாதகமாக இருக்கவேண்டும்.


Narayanan
ஜூலை 04, 2024 15:16

2025 வரை இருக்கும் பொது ஏன் கலைத்தார்கள் ???


தத்வமசி
ஜூலை 04, 2024 14:20

போரிஸ் ஜான்சன் காலத்திலேயே இங்கிலாந்து தள்ளாடியது, அதன் பிறகு ஒரு பெண் வந்தார். வந்தவர் சில நாட்களிலேயே ஓடி விட்டார். பிறகு சுணக் வந்தார். இப்போது தள்ளாடுகிறதோ இல்லையோ வெளியே தெரியவில்லை. ஒரு நாட்டின் தலைமை சரியாக இல்லையென்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பது பாரத மக்களுக்கு சொல்ல வேண்டிய தேவை இல்லை. அவ்வப்போது பார்த்து வருகிறோம். ஆனால் இங்கிலாந்து போன்ற நாடுகளில் அது பெரிய பாடு. யார் வென்றாலும் சரி, நாடு நன்றாக இருக்க வேண்டும்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ