உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்: பேச்சுவார்த்தைக்கு வர ஈரான் மறுப்பு

அமெரிக்கா என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்: பேச்சுவார்த்தைக்கு வர ஈரான் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: '' அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தைக்கு வர முடியாது. அந்நாடு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்,'' என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் கூறியுள்ளார்.ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. பிறகு அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இதன் பிறகு அந்நாட்டின் மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இருப்பினும், ஈரான் தொடர்ந்து அணுசக்தி தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xntzu9jv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிருபர்களிடம் பேசிய டிரம்ப், ' ஈரான் நாட்டு தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு கடிதம் எழுதி உள்ளேன். ஈரானை கையாள இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று ராணுவ ரீதியில் கையாள வேண்டும். மற்றொன்று இரு நாட்டு ஒப்பந்தம் போட வேண்டும். நான் ஒரு ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன். அந்நாட்டிற்கு தீங்கு செய்ய விரும்பவில்லை' எனக்கூறியிருந்தார்.இது தொடர்பாக ஈரான் தலைவரான அயதுல்லா அலி கமேனி கூறுகையில், பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என ஈரானை மிரட்ட முடியாது. அவர்களின் பேச்சுவார்த்தை பிரச்னைகளை தீர்ப்பதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. அவை ஆதிக்கம் செலுத்துவதையே நோக்கமாக கொண்டுள்ளன என தெரிவித்து இருந்தார்.இந்நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் கூறுகையில், அமெரிக்கா உத்தரவு போடுவதையும், மிரட்டல் விடுப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Jayaraman Ramaswamy
மார் 12, 2025 15:30

அணு ஆயுதம் எந்த நாட்டிற்கும் அவசியமில்லை. அதை உபயோகப்படுத்த போவதும் இல்லை. எதற்காக நாடுகள் தயாரிக்கின்றன. அணு சக்தி அவசியம். ஆயுதம் அல்ல. மக்களின் வரி பணத்தை வீணடிக்கிறார்கள்.


Laddoo
மார் 12, 2025 14:47

ஈரான் நாட்டு தலைமையும் கட்டு கம்பெனி போலவே உள்ளதே. ரெண்டு பேரும் ஊழல்/சர்வாதிகாரத்தோட மக்களை சாவடிக்க விரும்புறாங்க


GMM
மார் 12, 2025 13:58

வன்முறை நாடுகளை அமெரிக்கா , ரஷியா, சீனா, ராணுவ ரீதியில் கையாள வேண்டும். ஈரான், பாக்கிஸ்தான் தீவிரவாதம் நிறைந்த ஆக்கிரமிப்பு பூமிகள். கொடிய அணு அயுதம் ஒரு கிராம் கூட அங்கு இருக்க கூடாது. அவற்றை அந்த நாடுகள் பாதுகாக்க முடியாது. பாக் . அமெரிக்கா உதவி பெற்று இரட்டை கோபுரத்தை அழித்தது . அடுத்த தாக்குதல் எங்கும் எப்போதும் இருக்கலாம்.


Apposthalan samlin
மார் 12, 2025 12:29

சீனா ரஷ்யா இருப்பதால் தைரியம் நாமும் ஈரானோடு இருந்து இருக்கலாம் கச்சா எண்ணெய் இந்தியா ரூபாயில் கொடுத்தார்கள்


Laddoo
மார் 12, 2025 18:36

என்னங்க கருத்து இது? 200ரூவாதான் வருதில்ல, சரக்கு அடிச்சிட்டு தூங்குங்க


Ramesh Sargam
மார் 12, 2025 12:22

டிரம்புக்கு கோபம் அதிகரிக்கும். ஐயோ, ஈரான் மீது என்ன நடவடிக்கை எடுப்பாரா...?


ஷாலினி
மார் 12, 2025 11:53

ஈரான் தைரியத்தை பாராட்ட வேண்ம்.


ஆனந்த்
மார் 12, 2025 11:31

ஈரானுக்கு 'தில்' அதிகம் தான்


தத்வமசி
மார் 12, 2025 12:25

இப்படியே உசுப்பேத்தி ஈரான் மக்கள் படும் கஷ்டங்கள் இங்கிருந்து எழுதுபவர்களுக்கு என்ன தெரியப் போகிறது ?


ஆனந்த்
மார் 12, 2025 12:59

இது அந்நாட்டை ஆள்பவர்களுக்கு தெரிய வேண்டும்.


புதிய வீடியோ