உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் ‛மைக்ரோ சாப்ட் : ஆப்பிளை முந்தியது

உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் ‛மைக்ரோ சாப்ட் : ஆப்பிளை முந்தியது

வாஷிங்டன்: உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற பெருமை மைக்ரோசாப்ட் நிறுவனம் தட்டிச்சென்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டது.வாஷிங்டனில் உள்ள ரெட்மாண்டில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமாகும். இது கணினி மென்பொருள், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், பெர்சனல் கம்ப்யூட்டர்களை உற்பத்தி செய்கிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகிறது. இந்நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 2.888 டிரில்லியன் டாலராக 1.5 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.இந்நிலையில் கலிபோர்னியாவின் கூப்பர்டினோவில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு மற்றொரு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் ஐபோன்கள், ஐபேடுகள், பெர்சனல் கம்யூட்டர்கள் உற்பத்தில் முன்னணியில் திகழ்கிறது. இதன் சந்தை மதிப்பு 2.887 டிரில்லியனாக 0.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதையடுத்து உலகின் மதிப்பு மிக்க நிறுவனமாக மைக்ரோ சாப்ட் முதலிடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜன 12, 2024 00:24

அந்த அளவுக்கு பெரிய இடைவெளி இல்லை இரு நிறுவனங்களுக்கு இடையே.


Ramesh Sargam
ஜன 12, 2024 00:24

அந்த அளவுக்கு இடைவெளி இல்லை இரு நிறுவனங்களுக்கு இடையே.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை