உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகில் மிகவும் வயது முதிர்ந்தவர்; 116 வயது ஜப்பானிய மூதாட்டி மரணம்

உலகில் மிகவும் வயது முதிர்ந்தவர்; 116 வயது ஜப்பானிய மூதாட்டி மரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டோக்கியோ: உலகின் மிக வயதான ஜப்பானை சேர்ந்த மூதாட்டி டூமிகோ இடூகா, தன் 116வது வயதில் காலமானார்.ஆகஸ்ட் 2024ல் ஸ்பெயினின் மரியா பிரான்யாஸ் மோரேரா 117 வயதில் இறந்த பிறகு இடூகா உலகின் வயதான நபராக அங்கீகரிக்கப்பட்டார். தற்போது அவர் இறந்துள்ளார்.ஜப்பானின் தெற்கு நகர மேயர் ரியோசுகே தகஷிமா வெளியிட்டுள்ள அறிக்கை:இடூகா, ஜப்பானின் வர்த்தக மையமான ஒசாகா அருகே உள்ள அஷியாவில் வசித்து வந்தார். அவருக்கு நான்கு வாரிசுகள் மற்றும் 5 பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர், கடந்த 2019 முதல் நர்சிங் ஹோமில் தங்கி இருந்தார். அங்கு கடந்த டிச.29 ஆம் தேதி மரணமடைந்தார்.அவர் மே 23, 1908 இல், ஆஷியாவிற்கு அருகிலுள்ள ஒசாகாவின் வணிக மையத்தில், அமெரிக்காவில் போர்டு மாடல் டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு பிறந்தார்.மூன்று உடன்பிறப்புகளில் ஒருவரான இடூகா, உலகப் போர்கள், தொற்றுநோய்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்ட காலத்தில் வாழ்ந்தார். அதற்கு நாங்கள் அவருக்கு நன்றி கூறுகிறோம்.ஒரு மாணவியாக, கைப்பந்து விளையாடினார். தனது வயதான காலத்தில், வாழைப்பழங்கள், பால் போன்ற குளிர்பானமான கால்பிஸை ரசித்து குடித்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Laddoo
ஜன 05, 2025 09:36

முதுமை ஒரு சுகமான ஓய்வான கஷ்டம் தான். விடுதலை


Subramanian
ஜன 05, 2025 06:59

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


Natarajan V
ஜன 04, 2025 20:20

Sani peyarchi effect aa irukkumo?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை