உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிபர் டிரம்பின் அமைதி திட்டம் கை கொடுக்கவில்லை; உக்ரைன் அதிபர் சொல்வது இதுதான்!

அதிபர் டிரம்பின் அமைதி திட்டம் கை கொடுக்கவில்லை; உக்ரைன் அதிபர் சொல்வது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: உக்ரைன் அமைதித் திட்டத்திற்கு பதிலளிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ​​ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா பரிந்துரைக்கும் அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவுக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதாக உக்ரைன் அதிபர் தொடர்ந்து புகார் கூறி வருகிறார். அதே நேரத்தில் உக்ரைன் அமைதி திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஜெலன்ஸ்கி மீது விரத்தியையும் டிரம்ப் வெளிப்படுத்தி இருந்தார். இந்த சூழலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: ரஷ்யா எங்களிடம் நிலத்தை விட்டுக் கொடுக்குமாறு வலியுறுத்தி வருகிறது. நாங்கள் ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்.எதையும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். உக்ரைனின் சட்டம், அதன் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டம் எந்த சலுகைகளையும் அனுமதிக்காது. வெளிப்படையாகச் சொன்னால், நிலத்தை விட்டுத்தர எங்களுக்கு தார்மீக உரிமை இல்லை. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
டிச 10, 2025 13:08

நிலத்துக்காக நாட்டு மக்களை பலியிடுவது சரியா ஜெலன்ஸ்கி அவர்களே? ஒருவேளை உங்களுக்கு நிலம் கிடைத்து, அங்கே வாழ்வதற்கு மக்களே இல்லாவிட்டால் அந்த நிலம் கிடைத்து என்ன பயன்? கொஞ்சம் கூட உங்கள் கோரிக்கையை மறுபரிசீலனை செய்யமாட்டீர்களா ...?


Skywalker
டிச 10, 2025 11:12

Now USA backstabed Ukraine, just like Britain and France did for Czechoslovakia and Austria in 1938, Trump can never be trusted


Skywalker
டிச 10, 2025 11:10

Ukraine was a corrupt state, more corrupt than india and Phillipines, however the people have high patriotism for their country and resistance against Russia, moreover they lack weapons and are completely dependent on USA , and if US doesn't support Ukraine will collapse


sankar
டிச 10, 2025 11:03

சோனமுத்தா - அப்படின்னா நோபல் பரிசு அவ்ளோதானா -


Ganesh
டிச 10, 2025 10:08

டிரம்ப் சார், இப்போ முடிஞ்சா உக்ரயின் க்கு குடுக்கும் எல்லா சப்போர்ட்டயும் நிறுத்துங்களேன்... எல்லாம் சுயநல ஆயுத அரசியல்


sankaranarayanan
டிச 10, 2025 09:54

டிரம்பை நம்பினால் இதுதான் முடிவு கிடைக்கும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ