உள்ளூர் செய்திகள்

ஆடி பௌர்ணமி பூஜை

புதுடில்லி : க்யாலா ஜே. ஜே. காலனியில் அமைந்திருக்கும் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவிலில், ஆடி பௌர்ணமியை ஒட்டி, உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் அருள் பாலித்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து உற்சவ மூர்த்தியை, மேளதாளங்கள் முழங்க ஏந்தியவாறு கோவில் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !