உள்ளூர் செய்திகள்

நொய்டாவில் ஆதி சங்கர ஜெயந்தி

நொய்டாவில் ஆதி சங்கர ஜெயந்திஆதி சங்கர ஜெயந்தியை முன்னிட்டு , நொய்டா செக்டார் 62ல் உள்ள விநாயகா மற்றும் கார்த்திகேயா கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ரிக் வேதம் மற்றும் சுக்ல யஜுர் வேத பராயணங்களும் வாசிக்கப்பட்டன. அனைத்து பூஜைகளும் கோவில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா மற்றும் மோஹித் மிஸ்ரா செய்தனர் . ஆதி சங்கரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மகா தீபாராதனை முடிந்தவுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. - நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !