தேசிய விருது பெற்றவருக்கு வாழ்த்து
புதுதில்லி: அரசியலமைப்பு சட்ட அரங்கில் நடைபெற்ற, மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான தேசிய மையத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான விருது பெற்ற, சக்தி மசாலா குழுமத்தின் நிறுவனர் பி.சி. துரைசாமிக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து அளித்து இந்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் டி.ஆர்.கார்த்திகேயன், தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனர் - தலைவர் கே வி கே பெருமாள், செயலாளர் எஸ். பி. முத்துவேல் வாழ்த்து தெரிவித்தனர். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்