சரோஜினி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஏகாதச ருத்ர பாராயணம்
புதுதில்லி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, சரோஜினி நகர் ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் திருக்கோயிலில், நவக்கிரஹ ஹோமம், மஹன்யாஸ பாராயணம் மற்றும் ஏகாதச ருத்ர ஜபம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் மற்றும் ரித்விக்குகள் பலர் இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர். காலை 8.30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவாசனம் மற்றும் கலச ஸ்தாபனம் நடைபெற்றது. நவக்கிரஹ ஹோமம், மஹன்யாஸ பாராயணம், அதைத் தொடர்ந்து 11 ஆவர்த்தி ஏகாதச ருத்ர ஜபம் பாராயணம், நவக்கிரஹ அபிஷேகம், ஸஹஸ்ர நாமார்ச்சனை, உபசார பூஜைகள் மற்றும் கலச அபிஷேகம் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்