உள்ளூர் செய்திகள்

சங்கர வித்ய கேந்திராவில் இசைக் கச்சேரி

புதுதில்லி வசந்த் விஹாரில் அமைந்துள்ள சங்கர வித்ய கேந்திராவில் டிசம்பர் 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை சுவிட்சர்லாந்து உமா குமார் நிகழ்த்திய பாண்டுரங்கா "அபங்க்" இசைக் கச்சேரி நடந்தது. இசைக் கலைஞர்கள் உஜித் உதய், ராகவேந்திர பிரசாத், அனுராத் ஜெயின், ஸ்ரீராம் ஆகியோர் பக்கவாத்தியங்கள் வாசித்தனர். சங்கர வித்யா கேந்திராவின் கௌரவத் தலைவர் எஸ் லட்சுமி நாராயணன், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) கலைஞர்களுக்கு சால்வை அணிவித்தார். தில்லி காவல்துறையின் முன்னாள் சிறப்பு ஆணையாளர் பி. காமராஜ், ஐ.பி.எஸ். (ஓய்வு), மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் சீனிவாசன், தில்லிக் கம்பன் கழகத் தலைவர் கே வி கே பெருமாள், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் இணைச் செயலாளர் சத்யா அசோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !