தில்லி செந்தமிழ் பேரவை சார்பில் குடியரசு தின விழா
தில்லி மயூர் விஹார் பேஸ் 3 இல் உள்ள செந்தமிழ் பேரவை சார்பில் 26.01.2025 காலை 11:30மணி அளவில் ஸ்மிருதி வன பூங்காவில் 76 வது குடியரசு தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைவர் A. மாரி கொடியேற்றி தலைமை தாங்கினார். செயலாளர் S. சரவணன் முன்னிலை வகித்தார். செந்தமிழ் பேரவையின் தமிழாசிரியர் முத்துலட்சுமி மற்றும் ஜீவரத்தினம் பாடலாசிரியர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பேசிய சிறுவர் சிறுமியர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் செந்தமிழ் பேரவையின் துணைத்தலைவர் A M ஆறுமுகம் நன்றி உரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.