தன்வந்திரி தினம்
தன்வந்திரி பகவான் அவதரித்த தினத்தையே தன்வந்திரி ஜெயந்தியாகவும், தந்தேராஸ் தினமாவும் கொண்டாடுகிறோம். செல்வம் பெருகுவதற்கான தீபாவளி தினத்தை கொண்டாடுவதற்கு முன் ஆயுள், ஆரோக்கியத்தை தரும் தன்வந்திரி பகவானை வழிபடுவது மிகவும் முக்கியமானதாகும்.. நாம் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளிக்கு சிறப்பான இடம் உண்டு. எல்லா தரப்பு மக்களும் மகிழ்ந்து தங்கள் வசதிக்கேற்ப புத்தாடைகள் அணிந்து கொண்டாடும் பண்டிகை. உலகெங்கும் உள்ள இந்துக்கள் கொண்டாடும் பண்டிகை. வடநாட்டில் ராமன் அயோத்தி திரும்புவதையும் தென்னாட்டில் நரகாசுரவதத்தையும் மையமாக கொண்டு இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பாக வரும் திரயோதசி அன்று தான் தன்வந்திரி ஜெயந்தி, 'தன்திரயோதசி' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. நோய்கள் வராமலிருக்கவும், நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுள் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு அவசியம். ஹிமா"என்ற அரசனுக்கு திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறக்க நேரிடும் என்ற சாபம் இருந்தது. இதை அறிந்த அவள் மனைவி அந்த நாள்(தன் திரேயாஸ்) இரவில் கணவனைச் சுற்றிலும் ஏராளமான விளக்கு ஏற்றி, நடுவே ஆபரணங்களையும் வைத்து கணவனுக்கு புராணக் கதை கூறி தூங்காது பார்த்து கொண்டாளாம். பாம்பு உருவத்தில் வந்த எமனுக்கு, தீப எண்ணெயில் ஆபரணங்களின் பிரகாசத்தில் கண்கள் கூசவே, காலைவரை காத்திருந்துவிட்டு திரும்பி சென்றதாகவும், மனைவி தன்னுடைய கணவரை யமனிடம் இருந்து காப்பாற்றியதாகவும் புராணக் கதைகள் சொல்லப்படுகிறது தன்வந்திரி அவதரித்த நாளன்று தன்னை சுற்றிலும் தீபங்கள் ஏற்றி தன் மனைவி காப்பாற்றியதற்கு தன்வந்திரி கடவுளே காரணம் என மன்னன் நம்பினான். மக்கள் அனைவரையும் தன்திரே யாஸ் க்தினத்தன்று , இரவில் யம தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று உத்தரவிட்டார். ஐப்பசி மாத அமாவாசை 2 நாட்களுக்கு முன்பாக வரும் திரியோதசி நாளன்று தீபாவளி திருநாள் துவங்கி விடுகிறது. அன்று தன்வந்திரி ஜெயந்தி தன்திரேயாஸ் என்றும் சொல்வர். இந்த நல்ல நாளில் நம்ப ஊர் அக்ஷயதிரிதையை போன்று வடநாட்டில் கொண்டாடுகிறார்கள். தங்கம் வெள்ளி வாங்குவது, வீட்டிற்கு புதிய பொருட்களை வாங்குவது உறவினருக்கும் நண்பர்களுக்கும் பரிசளிப்பு என்று அமர்க்களப்படுகிறது. திரியோதசி முதல் தீபாவளி தொடங்கி லட்சுமி குபேர பூஜை, புது கணக்கை தொடங்குதல், கோவர்தன பூஜை இறுதியில் பாயிதுஜ் என்று சகோதர தினத்துடன் நிறைவடைகிறது. - நமது செய்தியாளர் மீனா வெங்கி