உள்ளூர் செய்திகள்

வேத கோஷம் அறக்கட்டளையின் சிறப்பு சமஷ்டி சந்தியாவந்தனம்

வேத கோஷம் அறக்கட்டளையின் சிறப்பு சமஷ்டி சந்தியாவந்தனம்​வேத கோஷம் அறக்கட்டளை சார்பில், பொதுமக்களின் ஆன்மீக முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கோயில்களில் 'சமஷ்டி சந்தியாவந்தனம்' (கூட்டாகச் செய்யும் சந்தியாவந்தனம்) ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.​இதன் ஒரு பகுதியாக, ஜூலை 11 மாலை 5.30 மணிக்கு மயூர் விகார், ஸ்ரீ காருண்ய மகா கணபதி ஆலயத்தில் நடைபெற்ற சமஷ்டி சந்தியாவந்தனம் மிகச்சிறப்பாகவும், உணர்வு பூர்வமாகவும் நடைபெற்றது. ​சந்தியாவந்தனத்தின் மகிமை​நமது சாஸ்திரங்களின்படி, சந்தியாவந்தனம் செய்யும் இடத்தைப் பொறுத்து அதன் புண்ணிய பலன்கள் மாறுபடுகின்றன. அதன் முக்கியத்துவத்தை கீழே காணலாம். இடம் :வீடு : புண்ணிய பலன் : 1 மடங்குகோசாலை : 10 மடங்குநதிக்கரை100 முதல் 1,000 மடங்குஆலயம் (கோவில்) அளவிடற்கரிய பலன் (அனந்த கோடி)பங்களிப்பு​தினசரி சந்தியாவந்தனம் செய்யும் அன்பர்கள், இனிவரும் காலங்களில் கோயில்களில் நடைபெறும் இந்த உன்னதமான கூட்டு வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டு, இறையருளையும், சாஸ்திர ரீதியான பலன்களையும் பெறுமாறு வேத கோஷம் அறக்கட்டளை அன்புடன் கேட்டுக்கொள்கிறது. ​ஸர்வே ஜனாஃ ஸுகினோ பவந்து ????????(அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க)- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !