உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் 2026ல் ஐ.பி.எல்., நடக்குமா?

 சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் 2026ல் ஐ.பி.எல்., நடக்குமா?

- நமது நிருபர் -: அடுத்தாண்டு நடக்கும் ஐ.பி.எல்., டி20 கிரிக்கெட் போட்டிகள், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. அதேவேளையில், மஹாராஷ்டிராவின் புனேயில் ஆர்.சி.பி.,யின் அனைத்து போட்டிகளும் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 11 பேர் பலி ஐ.பி.எல்., டி20 கிரிக்கெட் போட்டியின் 18 ஆண்டுகால வரலாற்றில், ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதன் முறையாக இந்தாண்டு கோப்பையை வென்றது. இதை கொண்டாடும் வகையில் பெங்களூரில் பாராட்டு விழா நடந்தது. ஜூன் 4ம் தேதி நகரின் பல பகுதிகளில் இருந்தும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் வந்திருந்தனர். சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தின் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் அமைக்கப்பட்ட தனி நபர் விசாரணை ஆணையம், 'பெரியளவில் நிகழ்ச்சிகள் நடத்த சின்னசாமி கிரிக்கெட் மைதானம் பாதுகாப்பது அல்ல' என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் கூட, இங்கு நடத்தப்படுவதில்லை. மஹாராஜா கிரிக்கெட் போட்டிகள், மைசூரில் நடத்தப்பட்டன. சமீபத்தில் இந்தியாவில் நடந்த மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியும் கூட பெங்களூரை தவிர, மற்ற மாநிலங்களில் நடந்தன. வழக்கமாக ஐ.பி.எல்., போட்டியில் வெற்றி பெறும் அணியின் மாநிலத்தில் அடுத்தாண்டுக்கான ஐ.பி.எல்., துவக்க விழா நடக்கும். பெங்களூரில் நடந்த கூட்ட நெரிசல் வழக்கு இன்னும் முடியாததால், அடுத்தாண்டு நடக்க உள்ள ஐ.பி.எல்., டி20 கிரிக்கெட் போட்டி துவக்க விழாவை, எங்கு நடத்துவது என்று பி.சி.சி.ஐ., எனும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், ஆர்.சி.பி., நிர்வாகமும் ஆலோசனை நடத்தின. அதில், பி.சி.சி.ஐ., - ஆர்.சி.பி., அணி நிர்வாகம், மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனேயில் உள்ள எம்.சி.ஏ., மைதானம்; ஆந்திராவின் விசாகபட்டினத்தில் உள்ள ஏ.சி.ஏ., - வி.டி.சி.ஏ., கிரிக்கெட் மைதானம்; கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு இன்டர்நேஷனல் மைதானம் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு உள்ளன. இதில், புனே மைதானத்தை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பேச்சு இது குறித்து புனேயின் எம்.சி.ஏ., எனும் மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்க செயலர் ரோஹித் பிஸ்பால் கூறியதாவது: கர்நாடகாவில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தால், போட்டிகள் நடத்துவதில் பிரச்னை உள்ளது. எனவே, துவக்க விழாவை நடத்தும் இடங்களை தேடி வருகின்றனர். நாங்களாக முன்வந்து, அவர்களுக்கு மைதானத்தை வழங்க தயாராக இருக்கிறோம். இது தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது. சில தொழில்நுட்ப பிரச்னைகளை நிவர்த்தி செய்து வருகிறோம். அனைத்தும் சரியாக இருந்தால், ஆர்.சி.பி.,யின் அனைத்து போட்டிகளும், புனேயில் நடத்தப்படும். இ வ்வாறு அவர் கூறினார். பேச்சு சுமுகமாக முடிந்தால், ஆர்.சி.பி., அணி போட்டிகள் புனேயில் நடக்கும். அதேவேளையில், பெங்களூரில் அந்த அணியின் போட்டிகள் நடக்கும்போது, மைதானம் முழுதும் சிவப்பு நிற 'ஜெர்சி'யே காணப்படும். ரசிகர்களின் ஆரவாரம், அணி வீரர்களை உற்சாகப்படுத்தும். இதே உற்சாகம் புனேயில் இருக்கும் என்று அணியினர் நம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை