உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / கத்திரிக்காய் தட்டை பயிறு குழம்பு

கத்திரிக்காய் தட்டை பயிறு குழம்பு

கத்திரிக்காயை உணவில் எடுத்து கொள்வதால் செரிமான பிரச்னை, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். எலும்புகளை வலுவடைய செய்கிறது. இதுபோல தட்டை பயறை உணவில் எடுப்பதன் மூலம் உடல் எடை குறைவதுடன், வயிற்று புண் ஆறும். ரத்த சோகை வராமலும் தடுக்கிறது. கத்தரிக்காய், தட்டை பயறு காம்பினேஷனில் சூப்பர் குழம்பு வைக்கலாம்.

செய்முறை

அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றாமல், தட்டை பயறு போட்டு லேசாக வறுக்க வேண்டும். பின், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வறுத்த தட்டை பயறை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் குக்கரில் போட்டு தண்ணீர் விட்டு நான்கு அல்லது ஐந்து விசில் விடவும். பின், வாணயில் காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, கொத்தமல்லி, உளுந்தம்பருப்பு, சீரகம், தேங்காய், வெந்தயம் போட்டு நன்கு வறுக்க வேண்டும். இதனுடன் புளியை போட்டு கொள்ளவும். பின் கொஞ்சமாக எண்ணெய் விட்டு சாம்பார் துாள், மஞ்சள் பவுடர், உப்பு சேர்த்து, தேவைப்படும் அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீரில் காய் நன்கு கொதித்தவுடன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து கொள்ளவும். கடைசியாக வாணலியில் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து விடவும். இந்த குழம்பை சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை