உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / படாபட் பன்னீர் பாலக் ரைஸ்பாத்

படாபட் பன்னீர் பாலக் ரைஸ்பாத்

பல தாய்மார்களுக்கு, தினமும் தங்களின் பிள்ளைகள் பள்ளிக்கு கொண்டு செல்ல என்ன செய்து தருவது என்பதே, பெரும் யோசனையாக இருக்கும். வீட்டில் வேலை அதிகம் இருக்கும். தாங்களும் அலுவலகம் செல்ல வேண்டும். சமையல் செய்ய போதிய நேரம் இருக்காது.சமைக்க நேரம் போதாமல் அவதிப்படும் தாய்மார்கள், படாபட் பன்னீர் பாலக் ரைஸ்பாத் செய்யலாம். இதை தயாரிக்க அதிக நேரம் தேவையில்லை. குட்டீஸ்களுக்கும் மிகவும் பிடிக்கும். உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

செய்முறை

முதலில் மிக்சியில் பாலக்கீரை, பச்சை மிளகாய், கொத்துமல்லி தழையை போட்டு நைசாக அரைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து அதில் 1 ஸ்பூன் எண்ணெய், 1 ஸ்பூன் நெய் போடவும். சூடான பின் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலையை போடவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.அதன்பின் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் துாள், தக்காளி, உப்பு, பட்டாணி, சிறிதாக நறுக்கிய பீன்ஸ் போட்டு வதக்கவும். ஏற்கனவே கழுவி, ஊற வைத்த அரிசி, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும். இரண்டு விசில் வந்ததும் நிறுத்துங்கள்.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த பன்னீரை போட்டு பொன்னிறமாக வறுத்து, ரைஸ் பாத்தில் போட்டு கிளறினால் சுவையான படாபட் பன்னீர் பாலக் ரைஸ் பாத் ரெடி. தயிர் பச்சடியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை