உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / மீண்டும் மீண்டும் சாப்பிட துாண்டும் மசாலா தேங்காய் சாதம்

மீண்டும் மீண்டும் சாப்பிட துாண்டும் மசாலா தேங்காய் சாதம்

குழந்தைகளுக்கு தினமும் இட்லி, தோசை, தயிர் சாதம், புளிசாதம், லெமன் சாதம் என்று கொடுப்பதற்கு பதிலாக, ஒருமுறை 'மசாலா தேங்காய் சாதம்' கொடுங்கள், குழந்தைகள் மீண்டும் மீண்டும் அந்த சாதத்தை கேட்டு அடம் பிடிப்பர். செய்முறை  முதலில் தேங்காய், மஞ்சள் துாள், மிளகாய் வத்தல், சிறிதளவு கடுகு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ளுங்கள்.  பின் ஒரு பாத்திரம் அல்லது வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். சிறிதளவு கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வத்தல் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். வாசத்திற்கு சிறிதளவு பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.  5 நிமிடங்களுக்கு பின், இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை, பச்சை வாசனை போகும் வரை 3 முதல் 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.  தற்போது மசாலா தேங்காய் சாதம் செய்வதற்கான கலவை ரெடி. இறுதியாக வேக வைத்து எடுத்து வைத்துள்ள சாதத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும். ஏற்கனவே உப்பு சேர்த்து சாதம் செய்திருப்பதால், தேவைப்படும் பட்சத்தில் மேலும் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.  இறுதியாக கொத்தமல்லி இலைகளை லேசாக துாவினால் போதும். சுவையான மசாலா தேங்காய் சாதம் ரெடி. இதற்கு துவையல், ஆம்லேட், தயிர் வெங்காயம் போன்றவற்றை வைத்து பரிமாறலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை