உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  பிரட்டிலும் செய்யலாம் சுவையான பரோட்டா!

 பிரட்டிலும் செய்யலாம் சுவையான பரோட்டா!

- நமது நிருபர் - பொதுவாக, மைதா அல்லது கோதுமை மாவில் பரோட்டா தயாரிப்பது வழக்கம். ஆனால், மிச்சமான பிரட்களிலும் சுவையான பரோட்டா செய்யலாம். எப்படி என பார்ப்போமா... தேவையான பொருட்கள்  பிரட் ஸ்லைஸ்கள் - 5  ரவை - அரை கப்  தயிர் -கால் கப்  தண்ணீர் - 1 கப்  அரிசி மாவு - 1 ஸ்பூன்  மஞ்சள் துாள் - கால் ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  துருவிய கேரட் - அரை கப்  குடமிளகாய் - 1  பீன்ஸ் - 4  ஸ்வீட் கார்ன் - 2 ஸ்பூன்  தக்காளி - அரை  பச்சை மிளகாய் - 1  கொத்துமல்லி - 1 கைப்பிடி  எண்ணெய் - தேவையான அளவு செய்முறை முதலில் பிரட் ஸ்லைஸ்களை, சிறு சிறு துண்டுகளாக்கி பாத்திரத்தில் போடவும். இதில் தயிர், தண்ணீர், ரவை சேர்ந்து நன்கு பிசைந்து சிறிது நேரம் மூடி வைக்கவும். அதன் பின் இதை மிக்சியில் போட்டு, மிருதுவாக அரைக்கவும். இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போடவும். இதில் அரிசி மாவு, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து பிசையவும். அதன் பின் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பீன்ஸ், ஸ்வீட் கார்ன், தக்காளி, பச்சை மிளகாய், கொத்துமல்லியை போட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் தடவவும். காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி, பரோட்டாவாக திரட்டி, தோசைக்கல்லில் போடவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும். ஒரு பக்கம் வெந்ததும், திருப்பி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்தால், சுவையான பிரட் பரோட்டா ரெடி. குருமா அல்லது தக்காளி சப்ஜி தொட்டு சாப்பிட்டால், சுவையாக இருக்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !