உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் /  இயற்கை ஆர்வலர் திம்மக்காவின் வீட்டுக்கு பாதுகாப்பு தேவை

 இயற்கை ஆர்வலர் திம்மக்காவின் வீட்டுக்கு பாதுகாப்பு தேவை

பெங்களூரு: ஆயிரக்கணக்கான மரங்களை நட்ட இயற்கை ஆர்வலர் சாலுமரத திம்மக்காவின், பெங்களூரில் உள்ள வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி, அவரது வளர்ப்பு மகன் உமேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு அவர் எழுதிய கடிதம்: சாலுமரத திம்மக்கா, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செய்த சேவைகளை அடையாளம் கண்டு, பல்வேறு அமைப்புகள், சங்கங்கள், மத்திய, மாநில அரசுகள் விருது வழங்கி கவுரவித்துள்ளன. இவருக்கு வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி பதக்கங்கள் உட்பட பல்வேறு விலை மதிப்புள்ள பொருட்கள், பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் உள்ளன. இதில், 'பத்மஸ்ரீ' போன்ற முக்கியமான விருதுகளும் உள்ளன. அவரது இல்லத்தில், 2016ல் திருட்டு நடந்தது. விலை உயர்ந்த விருதையும், தங்கப்பதக்கத்தையும் மர்ம கும்பல் திருடி சென்றது. அந்த வீட்டில் உள்ள பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே மீண்டும் திருட்டு நடக்கும் என்று அஞ்சுகிறோம். திம்மக்காவின் வீட்டிற்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை