உங்கள் சருமம் எப்படி: பவுண்டேஷன் இருக்கணும் அப்படி
முகத்தின் நிறம் மற்றும் மேக்கப்பின் நீடித்த தன்மையைத் தீர்மானிக்கும், முக்கிய அழகு சாதனப் பொருள் பவுண்டேஷன். சரியான பவுண்டேஷனைத் தேர்ந்தெடுத்தால், முகத்துக்கு இயல்பான தோற்றம் கிடைக்கும். எனவே, உங்கள் சரும வகைக்கு ஏற்ற பவுண்டேஷனைத் தேர்ந்தெடுப்பது அவசியம் என்கிறார் அழகு நிபுணர் இலக்கியா. ஆயில் ஸ்கின் எண்ணெய் சருமம் உள்ளவர்கள், மேட் பவுண்டேஷன் பயன்படுத்துவது சிறந்தது. இது முகத்தில் உள்ள அதிக எண்ணெயைக் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் மேக்கப் நிலைக்க செய்யும். ட்ரை ஸ்கின் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு, 'ஹைட்ரேட்டிங் பவுண்டேஷன்' பொருத்தமானது. இது சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். காம்பினேஷன் ஸ்கின் நெற்றியில் எண்ணெய் வழிவது, கன்னங்கள் வறண்டது போன்ற தோற்றம் உள்ளவர்கள், 'லைட் வெயிட் பவுண்டேஷன் கிரீம்' பயன்படுத்தலாம். இப்படி, சரியான பவுண்டேஷனைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் அழகை பார்த்து உங்களுக்கே பொறாமை வரும்!
மேக்அப்புக்கு அதிக ஆயுள்
தினசரி பயன்பாட்டுக்கு, 'லைட் கவர் பவுண்டேஷன்' பயன்படுத்தலாம். இது இயற்கையான தோற்றத்தை அளிப்பதுடன், சருமமும் மென்மையாக இருக்கும். பவுண்டேஷன் போடும் முன், மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்துவது அவசியம். இது மேக்கப்பை நீண்ட நேரம் நிலைக்கச் செய்கிறது.