உணவும், உடற்பயிற்சியும் ஆரோக்கியத்தின் ரகசியம்
வாழ்க்கை முறை மாற்றத்தால், இன்று இளம்வயதினரும் மாரடைப்பு, ரத்தஅழுத்தம் என, பல நோய்களுக்கு உள்ளாகி உயிரிழப்பை சந்திக்கின்றனர்.உடலை நோயின்றி பராமரிக்க என்ன செய்கிறீர்கள் என, பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை பேராசிரியர் அண்ணாதுரையிடம் கேட்டோம்.''உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பது, ஒவ்வொருவருக்கும் முக்கியம். அதிகாலை எழுந்து விடுவேன். அதன்பின், 4 கி.மீ., நடைபயிற்சி.அதன்பின், 45 நிமிடங்கள் பேட்மின்டன் விளையாடுவேன். காலை உணவை ஒருபோதும் தவறவிடுவதில்லை. எளிய காலை உணவு, மதியம் குறைந்தளவு உணவு, இரவு லைட் உணவு என, மூன்று வேளையும் உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றுகிறேன்.இடையில் பழங்கள் உட்கொள்கிறேன். இதன் மூலம் எனது உடல்நலனை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறேன்,'' என்றார்.