உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / ஆரோக்கியம் / தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்கள் : ஆய்வில் தகவல்

தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்கள் : ஆய்வில் தகவல்

தூக்கமின்மையால் அவதிப்படும் பெண்கள், உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகமிருப்பதாக ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பிரிகாம் பெண்கள் மருத்துவமனை தூக்கமின்மைக்கும், ரத்த அழுத்தம் அதிகரிப்பிற்கும் உள்ள தொடர்பு குறித்து 16 ஆண்டுகளாக, 25 முதல் 42 வயதுக்குட்பட்ட 66 ஆயிரம் பெண்களிடம் நடத்திய ஆய்வு முடிவுகளை, ஹைபர்டென்சன் இதழில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-உணவுப்பழக்கம், உடற்பயிற்சி போன்று தூக்கமும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கமின்மை என்பது பல உடல்நல பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிறது. தூக்கமின்றி அவதிப்படும் பெண்களுக்கு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியான தூக்கம், உடல் சீராக இயங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தூங்குவதில் பிரச்னை அல்லது சரியான தூக்கமின்றி அவதிப்படும் பெண்களின் ரத்த அழுத்தம் எளிதாக அதிகரிப்பதை கண்டறிந்தோம்.இது போன்று 25,987 பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது. தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்கும் பெண்களின் ரத்த அழுத்தத்தை, குறைந்த மணி நேரம் தூங்கும் பெண்களின் ரத்த அழுத்த அளவோடு ஒப்பிட்டு பார்த்தோம். போதியளவு தூக்கமின்றி இருப்பது, ரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன் சமநிலையை பாதிக்கிறது. இது பெண்கள் தங்களது இதய ஆரோக்கியத்தை காக்க, தூக்கத்திற்கு அளிக்க வேண்டிய முன்னுரிமையை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை