உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா /  இயற்கை எழில் கொஞ்சும் இளநீரு அருவி!

 இயற்கை எழில் கொஞ்சும் இளநீரு அருவி!

- நமது நிருபர் -: சிக்கமகளூரு மாவட்டம், கலசாவில் இருந்து, 11 கி.மீ., தொலைவில், மூடுபனி சூழ்ந்த மலைகளாலும், மாவினசாசி அருவி மற்றும் இளநீரு அருவி ஆகிய இரண்டு அழகான, ஆர்ப்பரிக்கும் அருவிகளாலும் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்கில், எழில்மிகு இளநீரு கிராமம் அமைந்து உள்ளது. இக்கிராமத்தின் அருகில் கலசா - குதிரேமுக் பிரதான சாலையில் இருந்தபடி இளநீரு அருவியை காணலாம். இது கர்நாடகாவில் அதிகம் அறியப்படாத அருவிகளில் ஒன்றாக திகழ்கிறது. பளிங்கு போல தெளிந்த நீராக இருப்பதால் 'இளநீரு' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள நீர் மிகவும் புத்துணர்ச்சியூட்டுகிறது. கலசா - குதிரேமுக் சாலையில் பயணிக்கும்போது, சம்சே என்ற இடத்தில் உள்ள கிளை சாலையில் திரும்பி, இளநீரு கிராமத்தை அடைய வேண்டும். அங்கிருந்து அருவியை அடைய மண் சாலை அமைந்துள்ளது. இதன் வழியாக வாகனத்தில் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும். மலையேற்றம் செல் வோர், இந்த அருவியை பால் போன்ற வெண்மையானது என்றும், வெள்ளை வைரம் போல பாய்கிறது என்றும் சொல்கின்றனர். எப்படி செல்லலாம்? காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் சென்று வரலாம்.  ரயிலில் செல்வோர் கடூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 90 கி.மீ., தொலைவில் உள்ள அருவிக்கு பஸ், டாக்சி மூலம் செல்லலாம்.  பஸ்சில் செல்வோர் கலசா பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 11 கி.மீ., தொலைவில் உள்ள அருவிக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி