உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | sports |covai

கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | sports |covai

கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு / sports / covai பள்ளிக் கல்வித்துறை சார்பில் கோவை-அ, கோவை-ஆ, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, சூலுார், மேட்டுப்பாளையம் என எட்டு குறுமைய விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இதில் கோவை-ஆ குறுமைய பள்ளி மாணவ, மாணவியருக்கு 11, 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் நேற்று செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளின் நிறைவில் மாணவ, மாணவியருக்கென தலா நான்கு பிரிவுகளிலும் முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. எட்டு பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்ற 24 பேர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்றோரை தலைமையாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.

ஜூலை 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை