சுற்றுசூழல் உணர்திறன் மசோதா பாதிப்புகளும்... எதிர்பார்ப்புகளும்...
தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்று வால்பாறை.இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில், வனம், உயிரினங்கள், நீர் ஆதாரம் ஆகியவற்றை பாதுகாக்க, இயற்கையுடன் இணைந்து வாழும் பழக்கத்தை கொண்டு வரவும், மத்திய அரசு கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதா வரைவு அறிக்கை வெளியிட்டது. இந்த வரவு அறிக்கையினை, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள, வால்பாறை உள்ளிட்ட, 183 கிராமங்களில் தாக்கல் செய்த பின், அதனை சட்ட வடிவமாக்கி நடைமுறைப்படுத்துவது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா அமல்படுத்தினால், வால்பாறை மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என தகவல் பரவியுள்ளது. இதை ரத்து செய்ய வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.