300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| zonal chess tournament| International school| sports | covai கோவை வெள்ளக்கிணறு The Hillside Prep சர்வதேச பள்ளியில் மண்டல அளவிலான செஸ் போட்டிகள் துவங்கியது. ரீஜனல் அசோசியேஷன் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்கூல்ஸ் மற்றும் தமிழ்நாடு கேம்பிரிட்ஜ் பள்ளிகள் கூட்டமைப்பு இணைந்து இந்த போட்டிகளை நடத்துகின்றனர். போட்டியை பள்ளி தலைவர் நித்யா கோகுல் துவக்கி வைத்தார் . போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சர்வதேச பள்ளிகளில் படிக்கும் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அண்டர் 8 முதல் அண்டர் 19 வரை பல்வேறு பிரிவுகளில், மாணவ மாணவிகளுக்கான போட்டிகள் தனித்தனியே நடத்தப்படுகிறது. போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்படும். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.