மதுரை கலெக்டர் ஆபீஸில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
மதுரை கலெக்டர் ஆபீஸில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் / Agricultural grievance redressal meeting / Collectorate / Madurai மதுரை கலெக்டர் ஆபீஸில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள கான்ட்ராக்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் மூட்டை ஒன்றுக்கு 60 ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டல் விடுப்பதாக புகார் கூறினர். அதற்கு லஞ்சம் கொடுக்கக்கூடாது என கலெக்டர் கூறினார். எதற்காக நீங்கள் லஞ்சம் பணம் கொடுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினாா். மேலும் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரத்தோடு வந்து புகார் அளியுங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தார்.
ஏப் 25, 2025