கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் | snake lurks in municipal office | nelliyalam | nilgiris
கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் | snake lurks in municipal office | nelliyalam | nilgiris நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ளது நெல்லியாளம் நகராட்சி அலுவலகம். நகராட்சி தலைவராக பழங்குடியினத்தைச் சேர்ந்த சிவகாமி உள்ளார். இவரின் அறை நகராட்சி அலுவலகத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ளது. இன்று மதியம் அலுவலக பணியாளர்கள் அறையைத் திறந்து சுத்தம் செய்த போது தலைவர் இருக்கையின் அடியில் பாம்பு ஒன்று பதுங்கியிருந்ததை பார்த்தனர்/ ஸ்பாட்டிற்கு விரைந்த தேவாலா வேட்டைத் தடுப்பு காவலர்கள் மோகன்ராஜ், ரமேஷ் ஆகியோர் அறையில் பதுங்கிய 7 அடி நீள கட்டு விரியன் பாம்பை மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர். மிகக் கடுமையான விஷத்தன்மை கொண்ட இந்த பாம்பு, தலைவர் அறைக்குள் பதுங்கிய நேரம் தலைவர் மற்றும் அலுவலக பணியாளர்கள், கவுன்சிலர்கள் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை.