அமைச்சர் செழியன் துவக்கி வைப்பு | Thanjavur | Chief Minister's Basketball Tournament
அமைச்சர் செழியன் துவக்கி வைப்பு / Thanjavur / Chief Ministers Basketball Tournament தஞ்சாவூர் மாவட்டத்தில் 2025- 26 ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் துவங்கியது, தடகளம், கூடைப்பந்து, ஹாக்கி, கைப்பந்து, வாலிபால், கேரம், நீச்சல், மேசைப்பந்து, கபடி, இறகுப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றன. போட்டியினை உயர் கல்வி அமைச்சர் செழியன் தொடங்கி வைத்தார். போட்டியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்று தங்களது விளையாட்டு திறனை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு 3 ஆயிரம், இரண்டாம் பரிசு 2 ஆயிரம், மூன்றாம் பரிசு ஆயிரமும் ரூபாய் அவரவர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். நிகழ்ச்சியில் எம்பி முரசொலி, கலெக்டர் பிரியங்கா பங்கஜம், எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்