உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருநெல்வேலி / 11 ஆண்டுகளாக தினமும் 1000 பேருக்கு அன்னதானம் | Tirunelveli | GH patients Free food for relatives

11 ஆண்டுகளாக தினமும் 1000 பேருக்கு அன்னதானம் | Tirunelveli | GH patients Free food for relatives

11 ஆண்டுகளாக தினமும் 1000 பேருக்கு அன்னதானம் / Tirunelveli / GH patients Free food for relatives திருநெல்வேலி அரசு மருத்துவமனை மூலம் தென் மாவட்ட மக்கள் பயன் பெறுகின்றனர். மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகளை சந்திக்கவும் உடனிருந்து பாதுகாக்கவும் உறவினர்கள் வந்து செல்கின்றனர். பெரும்பாலும் ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனையில் இருப்பதால் அவர்களால் மதிய உணவு வெளியே ஹோட்டல்களில் சாப்பிடுவது சாத்தியம் இல்லை. இதற்காக திருச்சி துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை சார்பில் மருத்துவமனை அருகே ஐந்து ஆலமர விநாயகர் கோயில் வளாகத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மதியம் 12 மணிக்கு துவங்கும் அன்னதானம் திட்டம் ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கிறது. சாம்பார் சாதம், தயிர் சாதம், கூட்டு, சாம்பார், ஊறுகாய் என சுவையான, சுகாதரமான வெரைட்டி ரைஸ் அயிட்டங்கள் வழங்கப்படுகிறது. சாப்பிடுவதற்கு மட்டுமின்றி பாத்திரம் கொண்டு வந்தால் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் பார்சல் வாங்கிச் செல்லவும் அனுமதிக்கின்றனர். அங்கேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்படுகிறது. தினமும் 900 முதல் 1000 பேர் வரை அன்னதான திட்டத்தில் பசியாறுகின்றனர். ஒரு நாள் உணவுக்கு 23 ஆயிரம் ரூபாய் முதல் 28 ஆயிரம் வரை செலவாகிறது. இந்த அறப்பணியை அறக்கட்டளை உறுப்பினர்கள், உதவும் உள்ளம் படைத்தவர்கள், அறங்காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உணவு தயாரிப்பில் திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற அருணாச்சலம் அய்யர் குடும்பத்தினரின் ஹோட்டல் நிர்வாகம் ஸ்ரீ மதுரம் தரப்பினர் தினமும் வெரைட்டி ரைஸ் தயாரித்து வழங்குகின்றனர்.

ஜூலை 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை