உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / வேலுாரில் நடக்கும் மாநில வாலிபால் போட்டியில் பங்கேற்க 12 பேர் கொண்ட அணி தேர்வு | Volleyball Match

வேலுாரில் நடக்கும் மாநில வாலிபால் போட்டியில் பங்கேற்க 12 பேர் கொண்ட அணி தேர்வு | Volleyball Match

வேலுாரில் ஜனவரி 27 முதல் 30 ம் தேதி வரை 41 வது சப் ஜூனியர் மாநில வாலிபால் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்கும் திருப்பூர் மாவட்ட வாலிபால் அணிக்கான தேர்வு போட்டி வித்ய விகாஷினி பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில வாலிபால் அசோசியேஷன் துணை தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். தேர்வில் மொத்தம் 47 பேர் பங்கேற்றனர். அதில் அணியின் தேர்வு குழு தலைவரும் முன்னாள் இந்திய அணி வீரருமான தேவராஜன் மாநில அணியில் பங்கேற்கும் 12 வீரர்களை தேர்வு செய்தார். நிகழ்ச்சியில் அலங்கியம் ஸ்போர்ட்ஸ் கிளப் சேகர், பொருளாளர் ராஜேந்திரன், இணை செயலாளர்கள் பிரகாஷ், பிரேம், உடற்கல்வி ஆசிரியர் முருகன் பங்கேற்றனர்.

ஜன 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை